'அக்கா' அந்த கம்மல் நல்லா இருக்கா'?... 'அலேக்கா திருடிய பெண்கள்'...வெளியான சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடை ஊழியர்கள் அசரும் நேரத்தில், நூதன முறையில் நகைகளை திருடும் பெண்களின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் நகை கடை வைத்திருபவர் தேவநாதன். இவரது கடைக்கு நகை வாங்க வேண்டு என வந்த இரண்டு பெண்கள், கடை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாடலாக எடுத்து காட்ட சொல்கிறார்கள். அப்போது இந்த மாடல் வேண்டாம் வேறு டிசைன் காட்டுங்கள் என கூற, கடை ஊழியர்கள் மற்றொரு டிசைனை காட்டுகிறார்கள். அப்போது ஊழியர்கள் அசந்த நேரம் பார்த்து லாவகமாக தங்க நகையை எடுத்துவிட்டு, தங்களது கையில் உள்ள கவரிங் நகைகளை மாற்றி வைக்கின்றனர். பின்னர் நகை டிசைன் எதுவும் பிடிக்கவில்லை என கூறி அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

இந்நிலையில் நகைகள் காணமல் போனது குறித்து அதிர்ந்து போன நகை கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட கால்துறையினர், திருடுபோன நகை கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அப்போது இரண்டு பெண்கள் நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நகைகளை திருடிய செல்வி மற்றும் ரத்னா ஆகிய இருவரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும்  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நகை திருடியது தற்போது தெரியவந்துள்ளது.

ROBBERY, CUDDALORE, CCTV, JEWELLERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்