‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’.. ‘நல்லாசிரியர் உட்பட 2 பேருக்கு’.. ‘உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2012-ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

எனினும் பாதிக்கப்பட்ட மாணவிகளுள் ஒரு மாணவியின் பெற்றோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆசிரியர்கள் நாகராஜூக்கு 5 ஆண்டுகள், மற்றும் புகழேந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இவர்களுள் ஆசிரியர் நாகராஜ் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பை வழங்கிய பின்னர் ‘குடும்பத்தினர்களிடையே பாதுகாப்பு இல்லாத சூழல், மேல்நிலைப் படிப்புகளுக்கே செல்ல முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட வேண்டிய சூழல், சிறு வயதிலேயே திருமணம் என பல பிரச்னைகளைத் தாண்டி மேல்நிலைப் பள்ளிகளில் பெண் பிள்ளைகள் சேர்ந்தால் இப்படியான ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.  இதெல்லாம் எத்தனை வேதனை அளிக்கிறது’ என்று நீதிபதி கண்கலங்கியுள்ளார்.

SCHOOLSTUDENT, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்