'வயல்வெளியில் கிடந்த குண்டு!'.. 'வெடித்துச் சிதறியதில்' இருவருக்கு நேர்ந்த கதி.. பீதியை கிளப்பிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

 செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

அவர் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்துக்கு சென்றபோது, அங்கு குண்டு ஒன்று கிடந்ததைக் கண்டார். அதை எடுத்தவர், தனது இருசக்கர வாகனத்தின் முன்பக்கமாக வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில், குண்டு தவறிப்போய் கீழே விழுந்ததில், ராமகிருஷ்ணனின் கை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

மேலும் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு பாகங்கள் அருகில் இருந்த அயர்ன் கடைக்கார கோவிந்தம்மாள் மீது, அவரது மார்புப் பகுதியில் பட்டதில் அவருக்கும் படுகாயம் உண்டானது. வெடிச்சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அனுமந்தபுரத்தில் உள்ள வனப்பகுதி அருகே உள்ளது ராணுவப் பயிற்சி மையம். 2 வருடங்களாக இங்கு நடந்த பயிற்சியின் போது வெடிகுண்டுகள் முட்புதர்களில் விழுந்து வெடிக்கச் செய்தன. சில வெடிகுண்டுகளும் பாகங்களும் வயல்வெளிகளிலும் விழுவதுண்டு.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இப்படியான பொருட்களை கண்டால், அவற்றை தொடாமல் போலீஸாருக்கு தகவல் கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

BOMB, BLAST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்