'மருத்துவக்குழுவுக்கு நன்றி'.. சென்னையில் குணமடைந்த இருவர் ... தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் லேட்டஸ்ட் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனவால் பாதிப்பிக்கப்பட்ட இரண்டு பேர் தற்போது குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று மூலம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே பத்திரமாக இருக்கவேண்டும் எனவும், பொதுவிடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் தற்போது குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'அமெரிக்காவில் இருந்து திரும்பிய இருவர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். போரூரில் வசித்து வரும் இவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனளித்ததன் மூலம் அவர்கள் தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் அடுத்த 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவக் குழுவுக்கு எனது நன்றி' என பதிவிட்டுள்ளார்.

 

 

TAMILNADU, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்