'கஷ்டப்பட்டு காசு சேர்த்த பாட்டிகள்'...'இப்போ எல்லாம் வீணா போச்சே'...அதிர்ந்து போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேரன் பேத்திகளுக்காக சிறுக சிறுக சேர்ந்த பணம், தற்போது எந்த வித உபயோகமும் இல்லாமல் போனது ஓட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள். இருவரது கணவர்களும் இறந்த நிலையில், தங்களது  மகன்கள் வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக, இவர்களது மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அப்போது மேல்சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை கூறியுள்ளது.

இந்நிலையில் மகன்களிடம் பணம் குறைவாக இருந்த நிலையில், உங்களிடம் ஏதாவது பணம் இருக்கிறதா என தங்களது தாயாரிடம் கேட்டுள்ளார்கள். அப்போது அதற்கு என்ன, எங்களிடம்  பேரன் பேத்திகளுக்காக சேர்த்து வைத்த பணம் ரூ.46,000'தை எடுத்து கொடுத்துள்ளார்கள். அதில் ரங்கம்மாள் தான் சேர்த்து வைத்திருந்த 24 ஆயிரம் ரூபாயும், தங்கம்மாள் வைத்திருந்த 22 ஆயிரம் ரூபாயும்  அடக்கம்.

இதனிடையே அந்த பணத்தை பார்த்த மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். காரணம் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள். இந்த பணம் செல்லாது என மகன்கள் கூற, அதிர்ச்சியில் இருவரும் கண்ணீர் வடித்தனர். மேலும் பணம் செல்லாது என்ற விபரம் தங்களுக்கு தெரியாது என தெரிவித்த பாட்டிகள், பேரன் பேத்திகளுக்காக கஷ்டப்பட்டு சேர்ந்த பணம் இப்படி உபயோகம் இல்லாமல் போய் விட்டதே என இருவரும் கண்ணீர் விட்டு கதறினார்கள்.

பணம் இருந்தும் அது தற்போது உபயோகம் இல்லாமல் போய்விட்டதே என எண்ணி, ஓட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

DEMONETIZED, OLD WOMEN, TIRUPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்