‘திடீரென கேட்ட வெடிச்சத்தம்’.. ‘தூள் தூளான கதவு, ஜன்னல்’.. ‘அதிகாலையில் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆற்காட்டில் திடீரென மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 2 வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.
ஆற்காடு சாய்பாபா நகர் ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இன்று அதிகாலை 3.45 மணியளவில் இவருடைய வீட்டுக்குள்ளிருந்து திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வர, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் வெளியே வந்துள்ளனர்.
இந்த விபத்தில் தனசேகரின் வீட்டுச் சுவர் பலமாக விரிசலடைந்து, கதவு, ஜன்னல்கள் உடைந்து தூள் தூளாகச் சிதறியுள்ளன. மேலும் வீட்டுக்குள் இருந்த டிவி வெடித்துச் சிதறி, ஷோபா, ஸ்கீரின் போன்ற பொருட்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த வீட்டில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தின் அதிர்வால் அருகில் வசிக்கும் ரகுபதி என்பவருடைய வீட்டுச் சுவரும் பிளவுபட்டுச் சேதமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா, போலீஸார் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளார். மர்மப்பொருள் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது வாயுக்கசிவு காரணமாக மின்சாதனப் பொருட்கள் எரிந்து வீடு சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- ‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'வீட்டுச் சுவரை தாவி உள்ளே புகுந்த சிறுத்தை' 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்'.. பீதியை கிளப்பிய வீடியோ..!
- ‘அசுர வேகத்தில் வந்த கார்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘3 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலியான பயங்கரம்’..
- ‘வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில்’.. ‘டீசல் டேங்க் தீப்பிடித்து’.. ‘சகோதரர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ‘திடீரென பற்றிய தீ’.. ‘நொடியில் மளமளவெனப் பரவியதால் நடந்த பயங்கரம்’..
- ‘என்னாது ஃபைன் பணம் இவ்ளோவா’... ‘விரக்தி அடைந்த இளைஞர்’... 'செய்த வேலையால்'... ‘நடுரோட்டில் தவித்த போலீஸ்’!
- ‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..