'காதலின் பேரால்’ என்ஜினியரிங் மாணவர்கள் செய்த காரியம்.. கல்லூரி மாணவியின் துணிச்சல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி தவறுதலான முறையில் புகைப்படம் எடுத்தும் வீடியோக்கள் எடுத்தும் மிரட்டிய காதலனையும் காதலனின் நண்பனையும் பற்றி தைரியமாக போலீசில் புகார் அளித்த மாணவி போலீசாரால் பாராட்டப்பட்டு வருகிறார்.
தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த, சென்னை மடிப்பாக்கம் மாணவி ஒருவரை, சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஸ்ரீநாத் என்பவர் தன்னை காதலிக்கும்படி பல நாட்களாக வற்புறுத்தியுள்ளார். இல்லை என்றால், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஸ்ரீநாத்தை காதலிக்க தொடங்கிய மாணவியை ஸ்ரீநாத் தனது கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக பொய் சொல்லி, சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கூட்டி சென்றுள்ளார்.
இதைப்பற்றி கேட்ட மாணவியிடம், ‘இது சர்ப்ரைஸ்’ என்று கூறி மழுப்பியுள்ளார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் அறை ஒன்றில் தனது நண்பர்களுடனான பார்ட்டியில் ஸ்ரீநாத்தும் மாணவியும் கலந்து கொண்டனர். மேலும் அங்கு ஸ்ரீநாத்தும் மாணவியும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தவறான நோக்கில் ஸ்ரீநாத்தின் நண்பர் யோகேஷ், ஸ்ரீநாத்தின் உதவியோடு எடுத்துள்ளார்.
அதன் பின்னர் மாணவியின் செல்போனுக்கு அந்த புகைப்படங்களை ஸ்ரீநாத் அனுப்பியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி, ஸ்ரீநாத்திடம் இது பற்றிக் கேட்ட போது முதலில் அந்த புகைப்படங்களை அழித்து விடுவதாக கூறியிருக்கிறார். பிறகு அந்த புகைப்படங்களை அழிக்க வேண்டுமென்றால் மீண்டும் ஒருமுறை தன் வீட்டிற்கு வந்து போக வேண்டும் என்று கேட்டுள்ளார். வேறு வழியின்றி மாணவி ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றபோது அங்கும் ஸ்ரீநாத்தையும் மாணவியையும் சேர்த்து யோகேஷ், மேலும் சில புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் யோகேஷ், ஸ்ரீநாத் இருவரும் இந்த புகைப்படங்களை வைத்து மாணவியை மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் மாணவி மிகவும் தவித்த நிலையில் தன் வீட்டில் மாணவி இருந்துள்ளார். இதனை கவனித்த மாணவியின் பெற்றோர் இதுபற்றி கேட்டபோது மாணவி, தன் பெற்றோரிடம் வெடித்து அழுது, தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை புரிந்து கொண்ட பெற்றோர்கள் மாணவியுடன் சென்று தென்சென்னை இணை கமிஷனர் அதிகாரி மகேஸ்வரியை சந்தித்து விவரத்தை கூறியுள்ளனர். அதன்படி போலீஸ் அதிகாரி மகேஸ்வரியின் ஆணைக்கிணங்க மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டனர்.
மேலும் அவர்களின் செல்போனில் மாணவியின் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்த இந்த இரண்டு மாணவர்களும் பிற்காலத்தில் இன்ஜினியரிங் படிக்கும்போதும் நண்பர்களாகத் தொடர்ந்து இதுபோன்ற தவறுகளை செய்துள்ளனர் என்றும் கண்டுபிடித்துள்ள போலீசார், இன்னும் எத்தனை மாணவிகளை இவர்கள் இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாக்கியுள்ளனர் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்தினாலும், மாணவிகளும், பெண்களும் தங்களுக்கு நேரும் கொடுமைகளை துணிச்சலுடன் முன்வந்து போலீசாரிடம் தெரிவிப்பதும், பெற்றோரிடம் கூறுவதும் சிறந்தது என்று போலீசார் தரப்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கிணற்றுக்குள் விழுந்த குழந்தை'...சூப்பர் ஹீரோவான 'சென்னை பாட்டி'...மெய்சிலிர்க்கும் சம்பவம்!
- ‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு!
- இனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்!
- 'புது டிரஸ்க்கு பணமில்லயா?'.. கணவர் மீதான ஆத்திரத்தில் பிறந்த நாளன்று மகனின் கழுத்தை அறுத்த பெண்!
- ‘ப்ளீஸ் என் மேலதான் தப்பு’.. மணமகனின் காலில் விழுந்து கெஞ்சும் முன்னாள் காதலி.. மணமகளின் முடிவு!
- ‘நா ஹரிணி.. கல்யாணத்த எங்க ஊர்லயே வெச்சிக்கலாம்..’ மேட்ரிமோனியில் பெண் குரலில் பேசி சீட்டிங்!
- ‘வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் ஆசிரியர்’.. கதறி அழுத மாணவர்கள்!
- மெட்ராஸ் சென்ட்ரல் அப்டேட்: 'ரயில் நிலையத்துல மட்டும் இல்ல, ரயிலிலும் மாறிய பெயர்கள்’!
- சேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- தன் பாட்டுக்கு ‘நின்றுகொண்டிருந்த பேருந்து’.. இயக்கிச் சென்ற சிறுவர்களால் நேர்ந்த சோகம்!