சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இனி இதை செஞ்சே ஆகணும்.. தெற்கு ரயில்வே அதிரடி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,981 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக உயர்ந்துள்ளது . சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,77,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 4531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,450 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள்
ஞாயிறு இரவு ஊரடங்கில் புறநகர் ரயில்கள் குறைந்த அளவே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 4 வழித்தடங்களில் 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி 300 ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில் சேவை நடைபெறும்.
மின்சார ரயில்
ரயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நாளை மறுநாள் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா
தெற்கு ரயில்வே அறிவிப்பின் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி டோஸ் போட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மெகா தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே தடுப்பூசி ஆர்வம் அதிகமாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை புறநகர் ரெயில்கள் இயங்குமா?.. ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு
- கடுமையாகும் இரவு நேர ஊரடங்கு... சென்னையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸார்..!
- பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு நிறுத்தம்? வெளியூர்களுக்கு செல்ல இயலுமா?
- திணுசு திணுசா கடத்துறாங்கப்பா... சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை உயிரினங்கள்..!
- 7 மணிநேரம் நீடித்த சிக்கலான ஆப்பரேஷன் – 4 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய தமிழக மருத்துவர்கள் – ஆசியாவிலேயே இதுதான் முதல் முறையாம்..!
- சென்னை ஃபாக்ஸ்கான் போராட்ட பின்னணியில் சீனா? தமிழ்நாட்டுக்கு குறியா?
- வண்டிய நிறுத்துங்க.. காரிலிருந்து இறங்கிச் சென்று முதல்வர் செய்த செயல்..!
- சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவத்தில் அதிரடி ‘திருப்பம்’.. வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
- இதுக்கு முன்னாடி இப்படி கேள்விப்பட்டதே இல்ல.. சென்னையில் நடந்த நூதன கொள்ளை.. மிரள வைக்கும் பின்னணி..!
- காதலியுடன் கடைசி நிமிடங்கள்.. உருக்கமான கடிதம்.. இறுதியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு