‘லாரி மீது அரசுப் பேருந்து மோதி’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெருந்துறை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் நடத்துநர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு ஒசூருக்கு புறப்பட்டுள்ளது. பேருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற போர்வெல் லாரி திடீரென இடப்புறமுள்ள மண்பாதைக்கு திரும்பியுள்ளது. அப்போது ஓட்டுநர் லாரியை மெதுவாக இயக்கியதால் பின்னால் வந்த அரசுப் பேருந்து லாரி மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துநர் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரேமா என்ற இளம்பெண்ணும், அவருடைய தாய் மகேஷ்வரியும் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் பிரேமா பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், மகேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் சின்னராஜ் உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

PERUNDURAI, LORRY, GOVERNMENT, BUS, ACCIDENT, DEAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்