தீபாவளி ஸ்பெஷல் சந்தை.. சரவெடியாய் விற்றுத் தீர்ந்த ஆடுகள்.. அடேங்கப்பா இவ்வளவு கோடிக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "நீங்க பண்ணது தப்புங்க".. கோவப்பட்ட விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த காரசார விவாதம்..!

வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 24 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆடைகள் வாங்குவது, பட்டாசு விற்பனை என தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுவாக, தீபாவளியன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் அசைவம் சமைத்து உறவினர்களுடன் சாப்பிட்டு மகிழ்வது வழக்கம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆடு விற்பனை சூடு பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடந்த ஆட்டு சந்தையில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன. வேடசந்தூர் தாலுகாவில் உள்ள மலை சார்ந்த கிராமமான அய்யலூரில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்போர், வியாபாரிகள் ஆகியோர் இந்த சந்தையில் பெருமளவில் கலந்துகொள்வர்.

அந்த வகையில் இன்று காலை சந்தை துவங்கியது. மக்கள் தங்களது ஆடுகளுடன் சந்தைக்கு வர , ஆரம்பம் முதலே வியாபாரம் சூடுபிடித்தது. சில மணிநேரங்களிலேயே இங்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஆட்டு சந்தை பெரியளவில் நடக்கவில்லை என்றும், ஆனால் இந்த வருடம் நல்ல லாபம் கிடைத்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தீபாவளியை முன்னிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆடுகள் விற்பனையாகின. இங்கே ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வாடிக்கை. அதன்படி இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் ஆடு வளர்ப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல, நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டு சந்தையிலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Also Read | வண்டி ஒட்டுறவங்க இதெல்லாம் செஞ்சா 10 ஆயிரம் ருபாய் Fine.. தமிழக அரசு அதிரடி.. முழு விபரம்..!

AYYALUR, GOATS, GOAT MARKET, DIWALI, ஆடுகள், ஆட்டு சந்தை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்