‘19 வகை மளிகைப்பொருட்கள்’.. ‘ரேஷன்கார்டு’ தேவையில்லை.. ஒருத்தர் ‘எத்தனை’ தடவைனாலும் வாங்கலாம்.. தமிழக அரசு அசத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப்பொருட்களை வழங்கும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் 19 வகை மளிகைப்பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை இன்று மதுரையில் உள்ள பொன்மேனி ரேஷன் கடையில் கூட்டுறத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள 29,486 ரேஷன் கடைகள் மற்றும் பகுதிநேர கடைகளிலும், கூட்டுறவு சங்கம் தொடர்பான கடைகளிலும் 19 வகையான மளிகைப்பொருள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விற்பனை செய்வதற்காக 10 லட்சம் சிறப்பு மளிகை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளன. ரூ.597 மதிப்புள்ள பொருள்கள் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து லாப நோக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பை வாங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு 20 சதவீதம் லாபம்தான். சிறப்பு தொகுப்பு பொருள்களை பெற ரேஷன் கார்டு அவசியம் இல்லை. அனைவருக்கும் இந்த தொகுப்பு விற்பனை செய்யப்படும். யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தால் மளிகைப்பொருள்களை பதுக்கிவைக்க வாய்ப்பில்லை. வெளிசந்தையில் விலை கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு அளிக்கப்படும் பொருள்கள் பின்வருமாறு:
1. உளுந்தம் பருப்பு - 1/2 கிலோ
2. துவரம் பருப்பு - 1/2 கிலோ
3. கடலைப்பருப்பு - 1/4 கிலோ
4. மிளகு -100 கிராம்
5. சீரகம் -100 கிராம்
6. கடுகு -100 கிராம்
7. வெந்தயம் -100 கிராம்
8. தோசை புளி -250 கிராம்
9. பொட்டுக்கடலை -250 கிராம்
10. நீட்டு மிளகாய் -150 கிராம்
11. தனியாத்தூள் -200 கிராம்
12. மஞ்சள் தூள் -100 கிராம்
13. டீ தூள் -100 கிராம்
14. உப்பு -1 கிலோ
15. பூண்டு -250 கிராம்
16. கோல்டுவின்னர் எண்ணெய் -200 மில்லி
17. பட்டை -10 கிராம்
18. சோம்பு -50 கிராம்
19. மிளகாய் தூள் -100 கிராம்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
- 'பொண்டாட்டி' தொல்லை 'தாங்க முடியலை சார்...' 'தயவு செஞ்சு காப்பாத்துங்க...' 'முதலமைச்சருக்கு' ஆண்கள் பாதுகாப்பு சங்கம் 'கோரிக்கை...'
- அடிக்கடி ஏற்படும் ‘மின்தடை’.. தயவுசெஞ்சு யாரும் ‘இத’ பண்ணாதீங்க.. பொதுமக்களிடம் மின்வாரியம் வேண்டுகோள்..!
- BREAKING: தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு...!
- 'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'
- 100 நாள் வேலை திட்ட ‘சம்பளம்’ உயர்வு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
- "கண் இமைக்கும் நேரத்தில்"... தீப்பிடித்து எரிந்த 'ஆம்புலன்ஸ்'... அதிர்ஷ்டவசமாக தப்பிய கர்ப்பிணி பெண்!
- ‘30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை’.. சென்னைக்கு வந்த சீனாவின் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’!
- 'மலை' உச்சியில் பற்றிய "தீ"... கருகிப் போன பல ஏக்கர் "காடுகள்"... "கடம்பூர்" மலையில் நடந்தது என்ன?
- 'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...