"செல்போனுக்காக சண்டையிட்ட நண்பர்கள்!"... "கொலையில் முடிந்த கொடூரம்"... "திருச்சியில் பரபரப்பு"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய விலையுயர்ந்த செல்போனுக்காக நண்பனை கொன்ற சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை அடுத்த மரக்கடை பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவறையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அது குறித்து, காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், கொலை செய்யப்பட்டவர், தில்லை நகரைச் சேர்ந்த 21 வயதான முகம்மது இசாக் என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு பாலக்கரை குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நாகூர் அனிபா என்ற 16 வயது சிறுவனுடன் நட்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இசாக் கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பொது கழிவறையிலிருந்து வெளியேறி இளைஞர் ஒருவர் நடந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இசாக்குடன் சுற்றித் திரியும் சிறுவன் நாகூர் அனிபாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, இசாக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை அச்சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
நாகூர் அனிபாவின் தாய், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் ஊருக்குத் திரும்பியபோது, மகனுக்காக விலையுயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி வந்துள்ளார். அந்த செல்போனை, இசாக் அடித்து பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபத்தில் இருந்த நாகூர் அனிபா, இசாக்கை மது அருந்த அழைத்துச் சென்று, கழிவறையில் வைத்து, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!
- ‘தோனி இதை செய்யத் தான் ஆசைப்படுறாரு’... ‘உயரிய விருது பெற்ற’... ‘தோனியின் ஆர்மி நண்பர்’... ‘தமிழக கேப்டன் பகிர்ந்த தகவல்’!
- ‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- ‘ஆடையின்றி மிதந்த ஆசிரியை உடல்’.. கார் டிக்கியில் தலைமுடி.. மகளுக்கு பீஸ் கட்டும்போது வந்த ‘போன்கால்’.. பகீர் சம்பவம்..!
- ‘பொங்கலன்று’ காணாமல்போன ‘இளைஞர்’... ‘உடலை’ பார்த்து ‘மயங்கி’ விழுந்த பெண்கள்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- குழந்தைக்கு ‘பெயர்’ வைப்பதில் ஏற்பட்ட தகராறு.. ‘பேரதிர்ச்சி’ கொடுத்த கணவர்... ‘உறைந்துநின்ற’ குடும்பத்தினர்...
- ‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
- ‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..!
- நண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- மனைவியின் ‘பேஸ்புக்’ அக்கவுண்ட்டை பார்த்து மிரண்டுபோன கணவன்.. கோபத்தில் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம்..!