'காதலுக்கு' உதவிய 'தங்கை'... 'அண்ணனால்' நேர்ந்த கொடூரம்... 'மருத்துவர்கள்' கூறியதைக் கேட்டு... அதிர்ந்து போன 'பெற்றோர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற தங்கையை, அண்ணனே கர்ப்பமாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (26). கூலி தொழிலாளியான இவர், அதேப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளான தங்கை பிரியாவை(16) தூதுவாக பயன்படுத்தி வந்துள்ளனர். சந்திரசேகரன் தனது காதலியை அடிக்கடி தனது பெரியப்பா வீடான பிரியா வீட்டில் சந்தித்து பேசி வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது தங்கை பிரியாவை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ந்து போயினர். சிறுமியிடம் பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த ஓராண்டாக சந்திரசேகரன், தங்கை என்றும் பார்க்காமல் மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...
- ‘4 வயது சிறுமிக்கு’... ‘பக்கத்து வீட்டு தாத்தாவால்’... 'சென்னையில் நடந்த சோகம்'!
- 'சபரி மலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தம்பியால்'... 'அக்காவுக்கு நேர்ந்த பயங்கரம்'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- 'சாலையில்' செல்லும் பெண்களிடம்... 'அநாகரீகமாக' நடப்பதே பொழுதுபோக்கு... பொடனியில் தட்டி ஜெயிலில் 'தூக்கிப்போட்ட' போலீஸ்!
- ‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
- திடீரென கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடி வந்த ‘அண்ணன்’... ‘அப்பாவால்’... ‘தங்கைக்கு’ நேர்ந்த கொடூரம்!
- 'பெத்த பொண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'வாயை திறக்காத அம்மா'...'டி.என்.ஏ' சோதனையில் அம்பலம்!
- ‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...
- 'திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்'... 'கோவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு'...
- 'தண்ணீர் பாட்டிலால் சிறுமிக்கு நடந்த சோகம்'... 'மும்பையில் பயங்கரம்'...