'மகளுக்கு 'ஆண்ட்ராய்ட்' போன்...'ஆசையா வாங்கி கொடுத்த அப்பா'... 'ஃபேஸ்புக் மூலம் நடந்த விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூனன் - காளியம்மாள் தம்பதியினர். இவர்களது முதல் குழந்தை 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அந்த குழந்தையின் நினைவாக மரம் நடும் பணியில் இந்த தம்பதியர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை பல்வேறு இடங்களில் 4 லட்சம் மரங்கள் வரை நட்டுள்ள இந்த தம்பதியர், ஒரு கட்டத்தில் மரம் நடுவதையே தங்களது முழு நேர பணியாக மாற்றி கொண்டார்கள்.
இந்நிலையில் அர்ஜூனனின் மனைவியும் அவரோடு இணைந்து மரம் நட ஆரம்பித்த நிலையில், அவரது மகளும் தனது படிப்பை 10ம் வகுப்போடு பாதியிலேயே நிறுத்திவிட்டு மரம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது மரங்கள் வளர்ப்பு இயற்கையை பாதுகாப்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள தந்தை அர்ஜூனன் தனது மகளுக்கு புதிதாக ஆண்ட்ராய்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இதையடுத்து புதிய மொபைல் வந்த மகிழ்ச்சியில் புதிய ஃபேஸ்புக் கணக்கை அந்த சிறுமி ஆரம்பித்துள்ளர். அப்போது ஃபேஸ்புக் மூலம் தென்காசி அடுத்த சொக்கம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறிய ராதாகிருஷ்ணன் சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூர் அழைத்து சென்ற அவர், வாடகை அறை எடுத்து தங்கி ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை சீரழித்துள்ளார்.
இதனிடையே கர்பமடைந்துள்ள அந்த சிறுமி தற்போது காவல்நிலைத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ராதாகிருஷ்ணன் இதுபோன்று வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என தெரிவவில்லை. எனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் மூலம் சிறுமி ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு!
- 'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ!
- ‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..
- ‘திருமணமான ஐந்தே நாளில் நடந்த சோகம்’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பத்தினர்’..
- 'தனியா போன பெண்ணை வேவு பார்த்த 'சைக்கோ'...'உடம்பு முழுக்க கடிச்சு'... பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
- ‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..
- 'டியூஷனுக்கு வரும் மாணவிகளுக்கு தனி அறை'.. 'வீடியோ எடுத்து மிரட்டி'.. ஆண் நண்பருடன் சேர்ந்து ஆசிரியை செய்த 'அதிரவைக்கும் சம்பவம்'!
- ‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
- 'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா?'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி!
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!