'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆரோவில் பகுதியில் மதுபோதையில் ஆட்டம் போட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் கல்லூரி மாணவ,மாணவிகளும் இருந்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுவையையொட்டி தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இதையொட்டி ஏராளமான கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில விடுதிகளில் டி.ஜே. எனப்படும் கேளிக்கை நடனம் நடத்தப்பட்டு வந்தது.இங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர பார்ட்டியின் போது மது மற்றும் போதை மருந்துகள் வினியோகிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.இதையடுத்து அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர்,ஆபாச நடனங்களை நடத்த தடை விதித்தனர். மேலும் போதை மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இந்நிலையில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையினால்,இது போன்ற ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலைக்கு சில கேளிக்கை விடுதிகள் சென்றன. இதையடுத்து ஆரோவில் அருகே உள்ள சில முந்திரித் தோப்புகளில் அழகிகளின் நடனங்கள் ரகசியமாக நடத்தப்பட்டு வந்தன.இதற்காக "அரோரா Music contest" என்கிற பெயரில் இணைய தளத்தில், ரகசிய குறியீடுகளை விளம்பரபடுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.ஆனால் நிகழ்ச்சி எங்கு, எப்போது என எந்த அறிவிப்பும் புக்கிங் செய்த போது கொடுக்கப்படவில்லை.
1000 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தியவுடன் ரகசிய குறியீடு மற்றும் வழிகாட்டி அனுப்பப்படுகிறது.காவல்துறையினர் இதனை கண்டுபிடித்து விட கூடாது என்பதற்காக இது போன்ற ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆனால் இது போன்ற நிகழ்ச்சி நடக்க விருப்பதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாருக்கு ஏற்கனவே ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸ்காரர் ஒருவரை இணைய தளம் மூலம் 1000 ரூபாய் செலுத்தி விருந்தில் பங்கேற்று தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இதனிடையே கேளிக்கை நிகழ்ச்சிக்கு புக் செய்தவர்கள் இரவில் புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் ஆலங்குப்பம் முந்திரி காட்டில் கூடியுள்ளனர்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மது விருந்துடன் இந்த டி.ஜே. நடன நிகழ்ச்சி தொடங்கியது.அப்போது அங்கிருந்தவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.போதை தலைக்கேற அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடினர். இதற்கிடையே காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க 25-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கேளிக்கை நடனம் நடந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்.அவர்களில் கல்லூரி மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நடன நிகழ்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள், மின்சாதன பொருட்கள், சரக்கு வேன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே போதை மற்றும் ஆபாச நடனம் போன்ற தவறான பாதைகளுக்கு கல்லூரி மாணவவர்கள் அதிகம் அடிமையாகி இருப்பதாக காவல்துறையினர் வேதனை தெரிவித்தார்கள்.பெற்றோர்கள் முறையாக தங்களின் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தன் உயிரை பனையம் வைத்து 2 உயிரை காப்பாற்ற 60 அடி கிணற்றில் இறங்கிய காவலர்’.. குவியும் பாராட்டுகள்!
- 'மியூசிக் கேளுங்க சார்.. லைஃப் நல்லாருக்கும்'.. லத்தியை புல்லாங்குழலாக மாத்திய கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ!
- 'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- 'அறிவுரை கூறிய தாய்க்கு நேர்ந்த கொடூரம்'... 'ஆத்திரத்தில் பட்டதாரி இளைஞர் செய்த விபரீதம்'!
- ‘உஷ்.. சத்தம் போடாதீங்க..எடை கொறஞ்சிடும்.. இது ரேர் பீஸ்’..மண்ணுளி பாம்பை கடத்த முயற்சித்த கும்பல்!
- 'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!
- 'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'!
- 'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'Life' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ!
- 'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'!