‘18 பேரால் வெட்டிக்கொல்லப்பட்ட விவசாயி!’.. ‘16 பேருக்கு ஆயுள் தண்டனை’.. 10 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயி ஒருவரை கொலை செய்த 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சிலர், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள ஆவரங்காட்டில் மினியாண்டி என்பவரது வீட்டில் தங்கி, அவர் கூறிய விவசாயிகளின் நிலங்களில் ஆட்டுக்கிடைகளை அமைத்து வந்தனர்.  இந்த நிலையில்தான், ஆவரங்காடு பகுதியில் இருக்கும் கச்சநத்தத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரது நிலத்தில் ஆட்டுக்கிடை அமைக்க வேண்டி கேட்டுக்கொண்டார். ஆனால் முனியாண்டியோ, இதில் உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், முனியாண்டி வீட்டில் தங்கி ஆட்டுக்கிடை அமைக்கும் அல்லிமுத்து என்பவருடன் சந்திரகுமார் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு தன் ஆட்கள் 17 பேருடன் வந்த முனியாண்டி அல்லிமுத்துவை வெட்டி வீழ்த்தினார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பாச்சேத்தி போலீஸார் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த குற்றவாளிகளுள் தற்போது 2 பேர் உயிருடன் இல்லாத சூழலில், மீதமுள்ள 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, குற்றவாளிகளுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

VERDICT, FARMER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்