‘கொரோனா அச்சத்தால்’... ‘தடைப்பட்ட’... ‘150 ஆண்டுகள் பாரம்பரியம்’... ‘சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சத்தால் புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவத் திருவிழா ரத்தாகியுள்ளது, திருநங்கைகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தை போல் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வில் திருத்தேரோட்டம், திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி, அரவான் களப்பலி உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக நாடு முழுவதும் இருந்து திருநங்கையர் பங்கேற்பது வழக்கம்.
ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் திருத்தேர் உற்சவ திருவிழா சித்திரை மாதத்தில் பவுர்ணமி தினத்தில் நடப்பது வழக்கம். நடப்பாண்டு கொரோனா தொற்று வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கோயில் திருவிழாக்கள் நடத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை சுற்றறிக்கையும் கோயில் நிர்வாகத்துக்கு வந்துள்ளது.
இதனால் ஏப்ரல் 22 முதல் மே 6ம் தேதி வரை நடைபெற இருந்த 2020-ம் ஆண்டு திருத்தேர் உற்சவ விழா நிகழ்ச்சிகள் நடைபெறாது. பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து வீட்டில் இருந்தபடியே அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமியின் மெய் அருளை பெற வணங்குமாறு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 150 ஆண்டுகளாய் தடையின்றி நடைபெறும் இவ்விழா இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் உள்ள திருநங்கையருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா!”.. சென்னையில் மட்டும் 373 ஆக உயர்வு! முழு விபரங்கள் உள்ளே!
- 'கொரோனா பரிசோதனை செய்துகொண்டு'... 'முடிவு வருவதற்கு முன்பே'... 'தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்'!
- 'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!
- 'குறையாத' பாதிப்பால் ஊரடங்கு 'நீட்டிப்பு'... ஆனால் 'குழந்தைகளுக்கு' மட்டும் 'விதிவிலக்கு' அளித்த நாடு... என்ன 'காரணம்?'...
- அவர் 'இறந்ததையே' 2 நாள் கழிச்சு தான் சொன்னாங்க... ஒருவேளை இப்டி இருக்குமோ?... 'அந்த' நாட்டின் மீது சந்தேகம் எழுப்பும் வல்லுநர்கள்!
- 'இந்த' வழக்கில் கைதானால் 'ஜாமீன்' கிடையாது... 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை... 'அவசர' சட்டம் கொண்டு வரும் மத்திய அரசு!
- நாயின் ‘மோப்பத்திறன்’ மூலம் கொரோனாவை கண்டறியும் ஆராய்ச்சி.. ‘இதுமட்டும் சாத்தியமானால்..!’.. நம்பிக்கை தெரிவிக்கும் விஞ்ஞானிகள்..!
- கொரோனாவால் 'பாதிக்கப்பட்டவர்கள்' குறைவு... குணமடைந்தவர்கள் அதிகம்... 'நம்பிக்கையளிக்கும்' தமிழக மாவட்டம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'என்னோட மக்கள் தான் முக்கியம்'... 'ட்ரம்ப் கொளுத்திய முதல் சரவெடி'... 'என்ன நடக்கும்'... பல கேள்விகளோடு இந்தியர்கள்!