'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆண்டிபட்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக,ஆண்டிபட்டி அமமுக கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பணப்பட்டு செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றார்கள்.அப்போது அமமுக கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.இதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.பின்பு வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டியில் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினரை  அமமுக கட்சி தொண்டர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், பணத்தை வைத்திருந்தவர்கள் தாக்க முற்பட்டதால்,அவர்களை எச்சரிக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தார். அதிக பைகளில் பணம் இருப்பதால் அதனை வருமான வரித்துறையினர் கைப்பற்றி ஆய்வு நடத்திவருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் சோதனையில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் உண்மையிலேயே அதிமுக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட பணம் என ஆண்டிபட்டி அமமுக கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ''நாங்கள் தான் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தோம்.ஆனால் அதிகாரிகள் அதிமுக'வினரை காப்பாற்ற அது எங்களுடைய பணம் என நடந்த சம்பவத்தையே திசை மாற்றிவிட்டனர்.தகவல் கொடுத்த எங்கள் மீதே புகாரை திருப்பி விட்டனர் என கடுமையுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்