‘விஷம் குடித்த 11-ம் வகுப்பு மாணவி’... ‘பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி’... 'கதறி புலம்பும் பெற்றோர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு பெற்றோருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வசித்து வந்த அபிராமி என்ற சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கிடக்க, பெற்றோர் பதறியடித்துக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். அதனைக் கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ந்து போயினர்.
இந்நிலையில் மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனில், அவரது வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அந்த மாணவியின் பெற்றோரும் சம்மதம் கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாத சிசு அகற்றப்பட்டது. எனினும் உடல்நிலை மோசமடைந்து மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- ‘பணம் கேட்டு தொல்லை’!.. ‘விஷம் குடித்து பெண் தற்கொலை’.. போலீஸ் விசாரணையில் திருநங்கை..!
- ‘2-வது மனைவியுடன் சொகுசு வாழ்க்கை’.. ‘3 மாதத்தில் 30 பைக்குகள்’.. அதிரவைத்த திருச்சி திருடன்..!
- ‘பசிக்குதுனு சொன்னான்’... ‘டிபன் வாங்கி வரதுக்குள்’... ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’... 'கதறித் துடிக்கும் பெற்றோர்’!
- ‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’... ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’... ‘சிக்கிய உருக்கமான கடிதம்’!
- ‘சல்யூட் தலைவா’!.. ‘கிணற்றில் மிதந்த விஷப்பாம்பு’.. மயிலை மீட்க உயிரை பணயம் வச்ச இளைஞர்..!
- ‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..
- ‘சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்திலேயே செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- 'சாப்பிட வர மறுத்து'... 'தோழிகள் சென்றதும்'... 'விடுதி அறையில்'... 'மாணவி செய்த அதிர்ச்சி காரியம்'!
- ‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!