'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு தப்புறதுக்குள்ள' நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து சேலம் பேருந்து நிலையத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க அந்த தனியார் பேருந்து முயன்றபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. மோதிய வேகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தார்கள்.

இந்த கோர விபத்தில்  தனியார் பேருந்தில் பயணித்த 10 பயணிகளும் அரசுப் பேருந்தில் பயணித்த 5 பயணிகள் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த வாழப்பாடி போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறுகையில், ''விபத்து நடந்த போது ஏதோ வெடி சத்தம் போல சத்தம் கேட்டது. அதன் பிறகு தான் அது விபத்து என புரிந்தது. மேலும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி நகர இணைப்புச் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், விபத்து தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

SALEM, ACCIDENT, CHENNAI, BUS, PRIVATE BUS, ROAD ACCIDENT, SALEM CHENNAI HIGHWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்