நடுக்கடலில் உடைந்த படகு.. ஆளே இல்லாத தீவில் சிக்கிய மீனவர்கள்.. உயிரை காப்பாற்றிய இளநீர்.. திக்..திக்.. பயணம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆள் நடமாட்டமே இல்லாத தீவில் சிக்கிக் கொண்ட தமிழக மற்றும் கேரள மீனவர்கள் இளநீரை குடித்து தாகத்தை தீர்த்து, பின்னர் வெற்றிகரமாக வீடு திரும்பியிருக்கின்றனர். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | திருமணமான அன்றே கணவரை பற்றி தெரியவந்த பரபரப்பு உண்மை.! அதே நாளில் கொழுந்தனை 2வது திருமணம் செய்த இளம்பெண்..!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் 27 ஆம் தேதி வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான படகு மீன்பிடிக்க கிளம்பி இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களும் கேரளாவைச் சேர்ந்த 9 மீனவர்களும் இருந்திருக்கின்றனர். பொதுவாக மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்பவர்கள் 25 நாட்கள் மட்டுமே கடலுக்குள் தங்கி மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் 35 நாட்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களை இந்த மீனவர்கள் வைத்திருந்தனர். பயணம் துவங்கிய முதல் வாரத்தில் மீன்பிடி படகில் இருந்த கியர் பாக்ஸ் உடைந்ததால் படகை அங்கேயே நிறுத்தி என்ன செய்வதென்று தெரியாமல் மீனவர்கள் தவித்திருக்கின்றனர்.

அப்போது இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு அந்த வழியாக சென்றிருக்கிறது. அந்த படகின் உதவியோடு கியர் பாக்ஸ் எடுத்துச் சென்று மீனை ஒருவர் பழுது நீக்கி எடுத்து வந்திருக்கிறார். ஆனாலும் சோதனை விட்ட பாடு இல்லை. ஏற்கனவே கியர் பாக்ஸ் உடைந்ததால் மூன்று நாட்கள் ஒரே இடத்தில் அந்த படகு நங்கூரமிட்டு இருந்திருக்கிறது. அதன்பிறகு கடல் கொந்தளிப்பு காரணமாக நங்கூரம் உடைந்ததால் காற்றின் திசையில் படகு அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.

அப்படி தவித்த நிலையில் ரப்பர் படகின் மூலமாக இந்திய பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுகளின் ஒரு பகுதியாக கருதப்படும் ஐலே ஆங்கிலேஸ் என்ற இடத்திற்கு மீனவர்கள் சென்று சேர்ந்திருக்கின்றனர். கையில் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு அனைவரும் சமைத்து சாப்பிட்டு உள்ளனர். ஆனால் குடிநீர் தீர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த தீவில் ஏராளமான தென்னை மரங்கள் இருந்திருக்கின்றன. அடுத்த 15 நாளைக்கு இளநீரை குடித்தே தாகத்தை மீனவர்கள் தீர்த்திருக்கின்றனர்.

அதன்பிறகு திடீரென மழை பெய்ததால் அந்த மழை நீரை சேகரித்து பயன்படுத்தியிருக்கின்றனர் இந்த மீனவர்கள். டிசம்பர் 23 ஆம் தேதி அப்பகுதிக்கு ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த கப்பல் ஒன்று வந்திருக்கிறது. அவர்களது உதவியுடன் அங்கிருந்து கிளம்பிய மீனவர்கள் ஜனவரி 2 ஆம் தேதி இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். ஆளில்லாத தீவில் சிக்கிக்கொண்ட மீனவர்கள் தண்ணீர் கிடைக்காமல் இளநீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து பின்னர் வேறு ஒரு கப்பலின் உதவியுடன் வீட்டிற்கு திரும்பியது அப்பகுதி மக்களை மிகுந்த ஆச்சரியத்திலும் மகிழ்ச்சிகளும் ஆழ்த்தி இருக்கிறது.

Also Read | 98 வயசுல விடுதலையான தாத்தா.. கூட்டிக்கிட்டு போக யாருமே வரலைன்னு.. ஜெயில் அதிகாரிகள் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி வீடியோ..!

FISHERMEN, SALOMON, SALOMON ISLANDS, SURVIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்