‘சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் கூறியதைக் கேட்டு’.. ‘உறைந்து நின்ற தாய்’.. ‘கணவர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரியில் 13 வயது சிறுமியை அவரது தாயின் இரண்டாவது கணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவரை இழந்த அவர் இரண்டாவதாக சசிகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். கேரளாவில் வேலை செய்துவந்த சசிகுமார் அவ்வப்போது வந்து அவர்களுடன் தங்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த மகளை அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண் உடனடியாக இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சசிகுமார் இவர்களுடைய வீட்டிற்கு வரும்போதெல்லாம் தனியாக இருக்கும்போது மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. அதை வெளியில் சொன்னால் நீயும், உன் தாயும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டுமென மிரட்டியதால் சிறுமி இதுபற்றி தாயிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சசிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘16 குழந்தைகள், 20 வது முறையாக கர்ப்பம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த இந்திய பெண்..!
- ‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!
- ‘திடீரென கூண்டுக்குள் இருந்து எகிறி குதித்த புலியால்’.. ‘அலறியடித்து ஓடிய கூட்டம்’.. ‘பின்னர் நடந்த பயங்கரம்’..
- ‘சமையலின்போது திடீரென பறந்த குக்கர் விசில்’.. ‘பெண்ணுக்கு நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்’..
- ‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’!
- ‘பணம் கேட்டா தரமாட்டியா?’... ‘ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்’... 'தாய்க்கு நேர்ந்த கொடூரம்’!
- ‘கண்டித்தும் திருந்தாத கணவனால்’... 'கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘3 பெண் குழந்தைகளுடன்’... ‘மனைவி எடுத்த விபரீத முடிவு’!
- ‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘ஃபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு’.. ‘முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்ததால் அதிர்ச்சி’..