‘அம்மா, அப்பாவை காணோம்’!.. ஒத்தையில நின்னு அழுதுட்டு இருந்த 12 வயது சிறுமி.. ‘யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது’.. அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் நிற்கும் 12 வயது சிறுமி நந்தினிக்கு அரசு உதவி புரிய கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சன்குளம் பகுதியிலுள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 மாத கர்ப்பிணி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் உள்ளிட்ட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுடன் சூரங்குடியைச் சேர்ந்த 45 வயதான பாக்கியராஜ் மற்றும் 40 வயதான செல்வி ஆகிய தம்பதியினரும் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் இந்த தம்பதியினரின் மகள் நந்தினி, பெற்றோரின் உடலை வாங்க கண்ணீருடன் உடற்கூறாய்வு அறையின் முன் நின்ற சம்பவம் காண்போரை கலங்க செய்தது.
இதுகுறித்து தெரித்த மாணவி நந்தினியின் உறவினர் சுகந்தி, ‘காலையில் வேலைக்கு போறோம்னு போனவங்க, எங்களுக்கு விபத்து நடந்தது தெரியாது. இந்த பொண்ணுதான் அப்பா, அம்மாவை காணோம்னு அழுதுகிட்டே போன் பண்ணி வர சொல்லிச்சு. உடனே நாங்க போனா, ஒத்தையில நின்னு அழுதுகிட்டு இருந்துச்சு. அப்புறம் நாங்கதான் கூப்பிட்டு வச்சுருக்கோம். இந்த பிள்ளைக்கு தேவையான உதவியை மத்திய, மாநில அரசும், ஆலை நிர்வாகமும் செய்யவேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
தினமும் மகளை பட்டாசு ஆலைக்கு உடன் அழைத்துச் செல்லும் தம்பதியினர், அதிர்ஷ்டவசமாக அன்று வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். உறவினர்கள் எப்படி பார்த்துக் கொண்டாலும் தாய், தந்தைக்கு ஈடாகாது என கூறிய அப்பகுதி மக்கள், யாருக்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது என தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்து நிர்கதியாய் தவிக்கும் சிறுமி நந்தினிக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
'கார்களை வீட்டிற்கு முன்பு நிறுத்தினால் பார்க்கிங் கட்டணம்'... அறிமுகமாகும் புதிய பார்க்கிங் கொள்கை!
தொடர்புடைய செய்திகள்
- சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
- தளபதியோட ‘வெறித்தனமான’ Fan-ஆ இருப்பாங்க போலயே.. நான் மலேசியாவில் இருந்து ‘சென்னைக்கு’ வந்ததே இதுக்காகதான்..!
- 22 கோடி ஆண்டு பழமையான ‘டைனோசர்’ கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது குழந்தை.. பெற்றோருடன் வாக்கிங் போகும்போது நடந்த ஆச்சரியம்..!
- 'அவ ஆசை படுறது தப்பில்ல... ஆனா'... 12 வயதிலேயே 'திருநங்கை'யாக மாறிய குழந்தை!.. ஆசையை கேட்டு அதிர்ந்து போன தாய்!
- ‘ஏழை மக்களுக்கு உதவ’... ‘இத்தனை கோடிக்கு’... ‘தனது சொத்துக்களை அடமானம் வைத்த நடிகர் சோனு சூட்?’...
- MBBS படிச்சிட்டாம்மா ‘பிச்சை’ எடுத்துட்டு இருக்க..! சர்டிஃபிகேட்டை பார்த்து ‘ஷாக்’ ஆன போலீஸ்.. மனதை ரணமாக்கிய சம்பவம்..!
- ‘பெட்ரூமில் லேப்டாப்பை வைத்திருந்ததால்’.. வீடு வாசல் அனைத்தையும் இழந்து ‘தவிக்கும்’ குடும்பம்! ‘அப்படி என்னதான் நடந்தது?’
- 'எவ்வளவு நம்பிக்கையா இருந்தோம்'?...' எங்க மொத்த உழைப்பும் வீணா போச்சு!'.. கடும் வேதனையில் உற்பத்தியாளர்கள்!.. தீர்வு தான் என்ன?
- ‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘இங்கெல்லாம் பட்டாசு வெடிக்கத் தடை’... ‘திருச்சி, தூத்துக்குடியிலும்’... ‘பசுமை தீர்ப்பாயம் உத்தரவு’... 'காரணம் இதுதான்'!