'கம்ப்ளைண்ட்டா குடுக்குற?'.. '12 ஆசிரியர்கள்.. 10 மாணவர்கள் சேர்ந்து'.. சென்னையில் +1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த ப்ளஸ் 1 மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசியதாக அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் மீது அனைத்து மகளில் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு விசாரித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 பயின்று வந்த மாணவி ஒருவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரசு மடிக் கணினி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளியில் சென்று கேட்டும் இதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், கல்வித் துறை அதிகாரிகளிடம் அம்மாணவி அளித்த புகாரை அடுத்து அவருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. ஆனால் அம்மாணவி புகார் கொடுத்ததால், அவரை அவரது பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து ஆபாசமாக திட்டியதால் மாணவி பள்ளி செல்ல மறுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்த அவரது தாய் போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் அளித்ததன் பேரில், மாணவியிடம் ஆபாச வார்த்தைகளை பேசிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கணக்குல அதிக மார்க் வாங்கணும்’.. 1 ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் டீச்சர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
- ‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- ‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..
- ‘பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்’.. ‘டிசம்பர் முதல் அமல் என அம்ரீந்தர் சிங் அறிவிப்பு’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை'.. தாய் செய்த 'உறையவைக்கும்' காரியம்!
- ‘திடீரென பற்றி எரிந்த தீ’.. துடிதுடிக்க இறந்த 26 பள்ளி குழந்தைகள்..! நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..