121 வருஷத்துல சென்னை - புதுவை இடையே கரையை கடந்த புயல்கள் இவ்வளவா?.. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 121 ஆண்டுகளில் சென்னை மற்றும் புதுவை இடையே 12 புயல்கள் கரையை கடந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கில் சுமார் 135 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர்,"மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு - சனிக்கிழமை காலைக்கு இடைப்பட்ட நேரத்தில், மாமல்லபுரத்துக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். தற்போது சென்னை எஸ் பேண்ட் ரேடார் (S Band Rador) அடிப்படையில் பார்க்கின்றபோது, இந்தப் புயலின் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 முதல் 80 கி.மீட்டராக இருக்கிறது" என்றார்.
சென்னை - புதுவை இடையே கடந்த 121 ஆண்டுகளில் 12 புயல்கள் கரையை கடந்திருப்பதாகவும் இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தால் இது 13 வது புயலாக இருக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
மாண்டஸ் புயல் கரையை கடப்பதை முன்னிட்டு தேசிய பேரிடர் மேலாண்மை படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்திருக்கின்றன. புயல் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளதாகவும், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடப்பதை உறுதி செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது எனவும், மழை நேரத்தில் வெட்ட வெளிகளில் நின்று செல்பி எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. அதேபோல, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்கள் முன்னரே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மாண்டஸ் புயல்: 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தம்.. 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழுவிபரம்..!
- நெருங்கும் மாண்டஸ் புயல்.. இதையெல்லாம் செய்யாதீங்க.. மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த வார்னிங்..!
- வருங்கால மனைவின்னு நம்பி பேசிய வாலிபர்.. 4 மாசம் கழிச்சு காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமா 21 லட்சம் அபேஸ்?!
- செல்போனை திருடி சென்ற இளைஞர்.. 1 கிமீ ஓடிச்சென்று பிடித்த பெண் போலீஸ்.. பேருந்து நிலையத்தில் நடந்த பரபர சேசிங்..!
- இடிக்கப்பட்ட சென்னையின் பழமையான அடையாளம்.. 4 தலைமுறை நடிகர்களை கண்ட தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்
- சென்னை: மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் மோதியதால் சேதமான மாநகர பேருந்து.!
- 3 கல்யாணம்.. 30 சிம் கார்டு.. திருமணம் ஆன 20 நாளில் நகையுடன் மாயமான 28 வயது பெண்.. சிக்கியது எப்படி? பரபரப்பு சம்பவம்..
- இறந்துட்டாருன்னு திதி கொடுத்த குடும்பம்.. 25 வருசம் கழிச்சு தெரிய வந்த உண்மை.. இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
- ரூ.786 கோடி நஷ்டம் ? அம்மா உணவகம் மூடப்படுகிறதா..? சென்னை மேயர் பிரியா சொல்வது என்ன.?
- இந்த சம்பவம் நிறய நடந்திருக்கு.. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்.. திருடிய வீட்டின் உரிமையாளரிடமே தப்பிக்க லிஃப்ட் கேட்ட திருடர்.!