KGF ராக்கி பாய் பாணியில் கடலுக்குள் கொட்டப்பட்ட 12 கிலோ தங்கம்... சினிமாவை மிஞ்சும் சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமேஸ்வரம் மண்டபம் அருகே கடலில் கொட்டப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!

மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் பகுதிக்கு தங்கம் கடத்தப்படுவதாக கடந்த 8-ஆம் தேதி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இணைந்து மண்டபம் தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் பைபர் படகு ஒன்று மீன் பிடித்து துறைமுகம் நோக்கி வந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அப்படகை சோதனை செய்ய முடிவு எடுத்தனர். அந்த சூழ்நிலையில் படகில் இருந்த சிலர் ஒரு மூட்டையை கடலில் வீசி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் படகில் இருந்த மூன்று பேரை விசாரணைக்காக மண்டபத்தில் இருக்கும் இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அவர்களிடம் படகிலிருந்து கடலில் வீசப்பட்ட மூட்டை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் படகிலிருந்து தங்கம் கடலுக்குள் வீசப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து அந்த கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து ஸ்கூபா டைவிங் செய்யும் வீரர்கள் தங்கத்தை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் 12 கிலோ தங்கம் கடலுக்குள் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது 1962 சுங்கச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

KGF ராக்கி பாய் பாணியில் கடலுக்குள் வீசப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | பூகம்பத்தில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய வீரர்கள்.. நெகிழ்ச்சியில் சிறுவன் செய்த காரியம்.. கண்கலங்க வைக்கும் வீடியோ..!

GOLD, RECOVER, OCEAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்