‘கராத்தே பயிலும் இடத்தில்’... ‘மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தந்தை செய்த காரியத்தால்’... ‘அதிர்ந்துபோன தாய்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீலகிரி அருகே, பள்ளி மாணவிக்கு கராத்தே பயிற்சியாளர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, கராத்தே பயிற்சியாளராக இருந்து வருபவர் சாபு ஆப்ரஹாம். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கராத்தே பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், மாணவிக்கு, பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு தொடர்ந்து அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், பள்ளி நிர்வாகம் மற்றும் தேவலாய கமிட்டியிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், இரு இடங்களிலும் உரிய பதில் கிடைக்காதநிலையில், மகளின் எதிர்காலம் பாதிக்கும் என, மாணவியின் தந்தை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என தடுத்துள்ளார். இதனால் மாணவியின் தாயார் மற்றும் தந்தைக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் சேர்ந்து, மாணவி மற்றும் மாணவியின் தாயாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கூடலூர் போலீசார் மாணவியின் தந்தை, சித்தப்பாக்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்த 4 பேர் என மொத்தம் 7 பேரை, கடந்த திங்கள்கிழமை அன்று மாலை கைது செய்தனர். மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துவந்த கராத்தே பயிற்சியாளர் சாபு ஆப்ரஹாம் மீது வழக்குப்பதிவுசெய்து, போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டிவியில் சுஜித் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்த’.. ‘பெற்றோரின் அலட்சியத்தால்’.. ‘2 வயது பெண் குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- ‘தினமும் வந்த போன் கால்ஸ்’.. ‘ஆனாலும் சம்மதிக்கல’.. காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..!
- 'காதலிக்க மறுத்த இளம்பெண்'... 'பஸ் ஸ்டாப்பில் கத்தியை காட்டி'... 'இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்’... பதறவைக்கும் வீடியோ'!
- ‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘கோயிலுக்கு’... ‘நண்பரோடு சென்ற சிறுமிக்கு’... ‘வழியில் நடந்த கொடூரம்’!
- ‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்சனைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- ‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘திருமணத்திற்கு சம்மதிக்காத மைனர் பெண்ணிற்கு’.. ‘தந்தை கண்முன்னே’.. ‘இளைஞரால் நேர்ந்த பயங்கரம்’..
- '11 வயது'.. 'ஒரே வருடத்தில் பலாத்காரம் செய்த 500 பேர்.. ஒரு இரவில் மட்டும் 10 பேர்'.. நடுங்கவைத்த சம்பவம்!