அப்படிப்போடு... 11 ஆம் வகுப்பில் பாடப்பிரிவு ஒதுக்கீடு.. பள்ளிக்கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பாடப்பிரிவு ஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "முடியாததையும் முடிச்சுக் காட்டுவாங்க".. முக்கிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளி பெண்ணை தேர்ந்தெடுத்த அமெரிக்க அதிபர்.. யார் இந்த ஆரத்தி பிரபாகர்..?

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்நிலையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் 83 மையங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

பாடப்பிரிவு ஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் முதலில் சந்திக்கும் சிக்கல், எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது? என்பதாகத்தான் இருக்கும். தங்களது மதிப்பெண்கள், எதிர்கால லட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் இதனை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், சில மாணவர்களுக்கு நினைத்த பாடப்பிரிவுகள் கிடைக்காமல் போவதும் உண்டு. இந்நிலையில் இந்த சிக்கலை தீர்க்க தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பரிந்துரை கூடாது

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பரிந்துரைகளின் அடிப்படையில் யாருக்கும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட கூடாது எனவும் உத்தரவிட்டிருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.

அதுமட்டும் அல்லாமல், பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு நடைபெறவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. மேலும், தமிழக அரசு பள்ளிகள், எந்த வித புகார்களுக்கு இடமளிக்காமல் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடப்பிரிவு ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. 

அரசு பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Also Read | "புருஷன் விட்டுட்டு போய்ட்டான்.. அந்த பெண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்க".. மிரட்டிய கும்பல்..விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

EDUCATION MINISTRY, 11TH STANDARD, 11TH STANDARD ADMISSION, SCHOOL EDUCATION MINISTRY

மற்ற செய்திகள்