113 பேருடன் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானம்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 113 பேரில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் 113 பேரும் நேற்று இரவு ஏர் ஏசியா விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து விமான நிலையத்தில் அனைவருக்கும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள 104 பயணிகளும் தாம்பரத்தில் உள்ள முகாமுல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாங்குற மரியாதையே இல்ல?’.. பொங்கல், தீபாவளி போல் கோயம்பேட்டில் குவிந்த வெளியூர் பயணிகள்!
- தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா!.. மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்வு! அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- "மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
- ‘கொரோனாவால வேலை போச்சா’..‘கவலைப்படாதீங்க எங்க கம்பெனிக்கு வாங்க, நல்ல சம்பளம் தாரோம்’.. பிரபல நிறுவனம் அசத்தல்..!
- கொரோனா சிகிச்சைக்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்து.. இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை..!
- “இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!
- ‘ஏதாவது சிரமம் இருக்கான்னு கேட்டேன்’.. ‘ஒரு மருத்துவர் சொன்னார்’.. ‘என் கண்களில் கண்ணீர்..!’.. உருகிய அமைச்சர்..!
- 3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...
- #VIDEO: ‘இப்படி எத்தன பேர இவர் ஊருக்குள்ள விட்ருப்பாரோ?’.. ‘கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய அதிகாரி!’.. வீடியோ!