'இனி 108 ஆம்புலன்ஸ் எந்த இடத்தில் வருதுனு தெரிஞ்சுக்கலாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆம்புலன்ஸ் இனி எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஒரு இடத்தில் விபத்து நேர்கிறது என்றாலோ அல்லது ஒருவருக்கு உடல் நிலையில் திடீரென கோளாறு ஏற்படுகிறது என்றாலோ, நாம் உடனே அழைப்பது 108 ஆம்புலன்சை தான். எனினும் ஆம்புலன்ஸ் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரத்திலிருந்து அல்லது எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பது குறித்தான பதற்றம் நமக்கு அந்நேரத்தில் தொற்றிக்கொள்ளும். இந்நிலையில் ஓலா, ஊபர் ஆகிய டாக்சிகளை போல, 108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய புதிதாக செயலி ஒன்று தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அந்த செயலி இன்னும் 2 மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் சர்வதேச நாடுகளை விட ஆம்புலன்ஸ் விரைவாக வருவதாகத் தெரிவித்தார். மாநகராட்சி பகுதிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப் பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ் வருவதாக அவர் கூறினார். நாளொன்றுக்கு 15000 அழைப்புகளை 108 ஆம்புலன்ஸ் கையாள்வதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

TAMILNADUBUDGET, TAMILNADUASSEMBLY, VIJAYAKUMAR, AMBULANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்