கரூர் அருகே நோயாளியுடன் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலளிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த, 108 ஆம்புலன்ஸ் நோயாளியை அழைத்துக் கொண்டு, அரவக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குமரன் வலசு மின் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்ஸின் முன்பகுதியில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது. இதையடுத்து வாகனத்தின் உள்ளேயிருந்தவர்களை வெளியேற்றிய ஓட்டுநர், நோயாளியை அருகிலிருந்த கோவிலில் தங்க வைத்தார். இதனிடையே கரும்புகை, தீப்பிழம்பாக மாறி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து சேதமானது. ஓட்டுநரின் துரித செயலால் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விறுவிறுவென முன்சென்று.. ஆம்புலன்ஸ் வந்ததும் 4 ஸ்டெப் பின்னால் போய் வழிவிடும் அழகர்’.. வைரல் வீடியோ!
- 'சிறு குழந்தைக்காக 'திரண்ட 'கேரளா'.. 'சல்யூட்' போடவைத்த முதல்வர்!
- 'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்!
- 'அதுக்காக கைல, காலுல எல்லாம் விழ முடியாது'...'பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு'...அதிர்ச்சியில் மக்கள்!
- ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மனிதநேயத்தைக் காட்டிய நூற்றுக்கணக்கான மக்கள்.. வைரல் வீடியோ!
- ‘கந்துவட்டி கொடுமை’.. ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு சம்பவம்!