‘கொஞ்சம் சீக்கிரம் வந்திருந்தா காப்பாத்திருக்கலாமே’.. நடுரோட்டில் ‘மரங்களை’ போட்டு போராட்டம்.. பரபரப்பான நேஷனல் ஹைவே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலை விபத்தில் சிக்கியவரை மீட்க 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் அருகே ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனம் ஒன்று பால்ராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே மினி சரக்கு வாகனத்தின் டிரைவர் வண்டியை சாலையிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பால்ராஜை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தகவல் தெரிவித்து 1 மணி நேரத்துக்கு மேலாகியும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலையில் மரங்களைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸில் படுகாயமடைந்த பால்ராஜை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சரியான நேரத்துக்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினி சரக்கு வாகனத்தின் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளியிலதான் பேங்க் கேஷியர்!'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'!.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்! பகீர் வாக்குமூலம்!
- 'எந்த அப்பாக்கும் இந்த நிலைமை வரக்கூடாது'... 'உடைந்த மொத்த கனவு'... 'இளைஞருக்கு நடந்தது என்ன'?... வெளியான உருக்கமான தகவல்கள்!
- 'நைட் சாப்பிட்ட பிரியாணி, பரோட்டா'... 'திடீரென வந்த வயிற்று வலி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'உங்கள நேர்ல பாக்கணும் போல இருக்கு.. நான் சொல்ற இடத்துக்கு வாங்க!'.. ஆசை ஆசையாக முகநூல் காதலியை பார்க்க போன நபருக்கு நேர்ந்த கதி.. சிக்கிய 20 வயது பெண்!
- 'லிப்ட் ஓபன் ஆச்சு!... உள்ள போன உடனே பார்த்த நடுங்க வைக்கும் காட்சி'!.. பிரபல எலெக்ட்ரானிக்ஸ் கடை இயக்குனரின் இறுதி நிமிடங்கள்!.. பதைபதைக்க வைக்கும் கோரம்!
- 'குளியல் அறையில் இருந்து .. அலறித் துடித்தபடி ஓடிவந்த 23 வயது கர்ப்பிணி பெண்!'.. சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருச்சியில் சோகம்!
- குறுக்கே வந்த 'மாடு',,.. sudden 'பிரேக்' போட்டு நிறுத்திய 'டிரைவர்',,.. விபத்தில் சிக்கிய 'முன்னாள்' முதல்வரின் 'கார்',, பரபரப்பு 'சம்பவம்'!!!
- திடீரென கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்... சாலையோரம் நின்றவர்களை அடித்து வீசி... பதைபதைக்க வைக்கும் கோரம்... 5 பேர் பலி!
- VIDEO: பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!.. கான்வாய் புடைசூழ... சாலையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- VIDEO : 'ஆர்ப்பரிக்கும்' போராட்டக் களத்திற்கு நடுவே மலர்ந்த 'காதல்',,.. திக்கு முக்காடிப் போன 'பெண்',,.. ஆரவாரம் பண்ணி 'வாழ்த்து' சொன்ன 'போராட்டக்காரர்கள்'!!!