‘ஐஸ் பெட்டியில் 1000 கிலோ ஆட்டுக்கறி’.. சோதனையில் வெளிவந்த ‘ஷாக்’ ரிசல்ட்.. அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுச்சேரியில் ஐஸ்பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்களும் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் கெட்டுப்போன 1000 கிலோ ஆட்டுக்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி வில்லியானூர் அருகே சுல்தான்பேட்டை புதுமேட்டுத் தெருவை சேர்ந்தவர் சித்திக் (42). இவர் அப்பகுதியில் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்ட ஆட்டுக்கறியில் விற்பனை செய்ததுபோக மீதமுள்ள 1000 கிலோ கறியை பிளாஸ்டிக் பைகளில் கட்டி ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்.

இதுகுறித்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் போலீசாருடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார். அப்போது ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ ஆட்டுக்கறியை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்துள்ளனர். சோதனை முடிவில் அனைத்து ஆட்டுக்கறியும் கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அனைத்து ஆட்டுக்கறியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் ஜேசிபி மூலம் வில்லியனூர் பகுதிக்கு கொண்டு சென்று குழி தோண்டி புதைத்தனர். மேலும் கடைக்கு சீல் வைத்து உரிமையாளரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்ம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PUDUCHERRY, MEAT, SEIZED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்