"என் மகனா நீ கிடைக்க என்ன புண்ணியம் செஞ்சேனோ?".. 100 வயது தந்தையை நெகிழ வெச்ச 70 வயசு மகன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எப்போதுமே பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உறவு என்பது மிக மிக உன்னதமாக உயர்ந்து நிற்கக் கூடியதாகும்.

Advertising
>
Advertising

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விபத்து நடந்ததுக்கு அப்புறம் இப்டித்தான் இருந்துச்சா".. 35 வருஷம் கழிச்சு வெளியான டைட்டானிக் கப்பலின் வீடியோ!!

குழந்தை பிறந்த நாள் முதல் அதை மெல்ல மெல்ல வளர்த்து, கல்வி கொடுத்து அதனை சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு எடுத்துக் கொண்டு வருவது வரை அனைத்துமே பெற்றோர்களின் கடமையாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர போராடிய அதே பெற்றோர்களை கைவிட்டு விடாமல் அவர்களின் கடைசி காலம் வரை பார்த்து கொள்வதும் பிள்ளைகளின் கடமையாக உள்ளது. அந்த வகையில், ஏராளமானோர், தங்களின் பெற்றோர்களை உடனிருந்து பார்த்துக் கொள்ளவும் செய்கின்றன்ர். இப்படி பல காலமாக தொடரும் இந்த பிணைப்பை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரித்து விட முடியாது. அதை உணரும் தருணத்தில் மட்டுமே அவை மிக மிக மனதை நெகிழ வைக்க கூடிய வகையிலும், நம்மை ஒரு நிமிடம் கலங்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் தற்போது ஒரு தந்தை மற்றும் மகன் ஆகியோரிடையே உருவான பிணைப்பு தொடர்பான வீடியோ தான் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் கலங்க வைத்து வருகிறது. அதன்படி இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவின் படி, 100 வயது தந்தைக்கு 70 வயது மகன் ஒருவர் பாட்டு பாடி அவரை உற்சாகப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவின் படி, சுமார் நூறு வயதாகும் தந்தை ஒருவர் படுக்கையில் இருக்கும் சூழலில் அவரது அருகே இருக்கும் மகன், ஒரு பாட்டை விசில் வடிவில் பாடுவதாகவும் அது என்ன பாட்டு என கண்டுபிடிக்கும் படியும் தந்தையிடம் கூற "பாட்டு பாடவா, பாடம் சொல்லவா?" என்ற பாடலை விசில் வழியாக அவர் பாடுகிறார். இதனைத் தொடர்ந்து அந்த தந்தையும் பாட்டை சரியாக கண்டுபிடிக்க பின்னர் அங்கு இருக்கும் குடும்பத்தினர் சேர்ந்து அந்த பாடலை பாடவும் செய்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

மிகவும் உருக்கமான ஒரு வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கும் சூழலில் தற்போது நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | "இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும்".. ரோஹித் ஷர்மாவுக்காக பாகிஸ்தானில் ரசிகர் வெச்ச பேனர்.. ட்ரெண்டிங்!!

OLD MAN, FATHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்