டெல்லி ‘தப்லீக்’ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தப்ப முயற்சி.. சென்னை விமானநிலையத்தில் சிக்கிய 10 பேர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியாவை சேர்ந்த 10 பேர் சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மலேசியாவை சேர்ந்த 10 பேர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து, டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மார்ச் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை மாநாட்டில் பங்கேற்ற இவர்கள் 11ம் தேதி டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் தென்காசி, வல்லம், குற்றாலம் சென்று சுற்றி பார்த்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல அந்நாட்டு அரசு ‘பதிக் ஏர்’ என்ற சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விமானத்தில் அவர்கள் 10 பேர் செல்ல முயன்றுள்ளனர். அப்போது நடைபெற்ற விசா பரிசோதனையின் போது அதிகாரிகளிடம் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் தடுப்பு சட்டம், வெளிநாட்டவர் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதாக என மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். தொற்று இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்