‘சீரியலை’ பார்த்து போட்ட ப்ளான்.. மாமியார் குடும்பத்தை ‘பழிவாங்க’ மருமகள் செய்த காரியம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் அருகே விருந்து அழைத்துச் சென்று 10ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோவிலூர் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் நதிவதானா. இவருக்கும் சின்னதாராபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நதிவதனாவுக்கும், அவரது மாமியார் காளீஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறில் நதிவதானாவை தாய்வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் நதிவதனா ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை விருந்துக்கு அழைத்துச் சென்ற மாமியார் காளீஸ்வரி, தனது கணவரின் சகோதரர் தமிழரசனுக்கு கட்டாய திருமணம் செய்து வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக சிறுமிக்கு தமிழரசன் தாலி கட்டும் வீடியோவையும் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மாமியார் காளீஸ்வரி, நதிவதனாவின் கணவர் செல்வம் உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டாய திருமணம் நதிவதனாவின் உதவியுடனே நடந்தது தெரியவந்துள்ளது. தனது கணவரின் சகோதரர் தமிழரசன், 10ம் வகுப்பு படிக்கும் நதிவதனாவின் தங்கையை விரும்பியுள்ளார். மேலும் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்துகொள்வதாக கூறியதால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் ஏற்பாட்டின் பேரில் கோயிலில் வைத்து சிறுமிக்கு திருமணம் நடந்ததுள்ளது.
தற்போது கணவருடன் சண்டையிட்டு நதிவதனா பிரிந்து வந்துவிட்டதால், மாமியார் மற்றும் கணவரை பழிவாங்குவதற்காக, தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து திட்டம் போட்டுள்ளார். அதன்படி தனது தங்கைக்கு மாமியார் வீட்டில் கட்டாய திருமணம் செய்ததாக நதிவதனா நாடகமாடியுள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து வைத்த இருவரது பெற்றோர், அதற்கு உடந்தையாக இருந்த நதிவதனா, அவரது கணவர் செல்வம் மற்றும் சிறுமியை திருமணம் செய்த தமிழரசன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மாமியார் குடும்பத்தை பழிவாங்க எண்ணி கடைசியில் குடும்பத்துடன் தானும் சிக்கிக் கொண்ட மருமகளின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கர்ப்பிணி' மகளை காரில் கடத்திச்சென்ற பெற்றோர்... காரணத்தை கேட்டு 'அதிர்ந்து' போன போலீசார்!
- இரவில் கேட்ட 'திடீர்' சத்தம்... தீக்கு இரையாகி 'திகுதிகுவென' பற்றியெரிந்த வீடுகள்... என்ன காரணம்?
- "கறுப்பினத்தவர் மரணத்துக்காக மண்டியிட்டது அருவருப்பானது!.. வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்!" - மன்னிப்பு கேட்டு அதிரவைத்த போலீஸ்காரர்!
- 'விடிஞ்சா' கல்யாணம்... இரவில் 'விபரீத' முடிவெடுத்த நர்ஸ்... இவளாவது 'நல்லா' இருப்பான்னு நெனச்சேனே... கதறிய தந்தை!
- நண்பருக்கு 'ஜாமீன்' கையெழுத்து போட வந்து... சொந்த செலவில் 'ஆப்பு' வைத்துக்கொண்ட புதுக்கோட்டை இளைஞர்!
- ஆட்டுக்குட்டியை 'கடித்த' வளர்ப்பு நாயால்... அண்ணன் 'மகனுக்கு' நேர்ந்த கொடூரம்... 3 பேர் கைது!
- ‘உன் வயசுல எனக்கு ரெண்டு பொண்ணு இருக்கு’.. கல்லூரி மாணவியுடன் ‘குடித்தனம்’ நடத்திய கணவன்.. ‘அதிரடி’ ஆக்ஷனில் இறங்கிய மனைவி..!
- ‘சுடுகாட்டில்’ 4 நாள் கேட்பாரற்று கிடந்த மூதாட்டி.. மறைந்த ‘மனிதநேயம்’.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- ‘பணம் கொடுக்கலேன்னா தலைகீழா குதிச்சுடுவேன்’.. மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த ‘குடிமகன்’.. பரபரப்பு சம்பவம்..!
- 'போலீஸ்' காதுல 'விழுற' அளவுக்கு... அப்டி ஒரு 'ரகசியத் திட்டம்...' 'கொள்ளையடிக்க' திட்டம் போடும் போதே... 'தட்டித் தூக்கிய போலீசார்...'