‘இத யாருமே எதிர்பாக்கலயே’.. சோகத்தில் திடீர் ஓய்வு முடிவை எடுத்த நட்சத்திர வீரர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணி வீரர் சாலமன் மைர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி இடைக்கால தடை விதித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இது அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை ஜிம்பாப்வே அரசு கலைத்து, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க இடைக்கால கமிட்டியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து ஜிம்பாப்வே அணியில் உள்ள அரசியில் தலையீடு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் அணியில் அரசியல் தொடர்பு இருப்பது ஐசிசி விதிகளுக்கு புறம்பானதால் ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சாலமன் மைர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக 47 ஒருநாள் போட்டி, 9 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஓய்வு முடிவை சாலமன் மைர் எடுத்தது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ICC, SOLOMON MIRE, RETIREMENT, ZIMBABWECRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்