'இனி கஷ்டம்தான்': இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனுக்கு ஜாகிர் கான் கொடுத்த வார்னிங்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான அஜிங்கியா ரஹானேவுக்கு, முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜாகிர் கான் எச்சரிக்கை கொடுத்துள்ளார். தற்போது இந்தியாவில் திறன் வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் தேர்வாவது கடினம் என்று ரஹானேவுக்கு அவர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. தொடரின் முதல் டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று நினைத்த நிலையில், திறமையாக விளையாடி ஆட்டத்தை டிரா செய்தது நியூசிலாந்து அணி. இந்நிலையில் மும்பையில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய ரஹானே, இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக நீக்கப்பட்டார். அவர் கடந்த சில போட்டிகளாக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அணி நிர்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம் என்று சர்ச்சை வெடித்துள்ளது.

இந்த சர்ச்சைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜாகிர் கான் பேசியுள்ளார். அவர், ‘நீங்கள் உண்மையிலேயே உடல் தகுதி பெறவில்லை என்றால், அணியில் இடம் பெறாதது பிரச்சனை இல்லை. அணியிலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் இடம் பிடிக்கவே முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால், தற்போது உள்ள இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டால் மீண்டும் இடம் பிடிப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் தற்போதுள்ள திறன் வாய்ந்த வீரர்களை நீங்கள் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். இதுவரை அணியில் இடம் பெறாதவர்கள் கூட உள்ளூர் ஆட்டங்களில் மிகச் சிறப்பாக விளையாடி டீமுக்குள் வரப் பார்க்கிறார்கள். எனவே, இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் தொடர்ந்து நன்றாக விளையாடினால் தான் அணியில் நீடிக்க முடியும் என்பதையும் உணர்ந்து உள்ளார்கள்’ என்று ரஹானேவை குறிவைத்து சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 35 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் அவரது பேட்டிங் சராசரி, 39.01 ஆக குறைந்துவிட்டது. இதனால் அவர் அணியிலிருந்து விரைவில் நீக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த சர்ச்சை குறித்துப் பேசியுள்ள அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ‘ரஹானே, ஒரேயோரு இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினாலே போதும், மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிடுவார். கண்டிப்பாக அவர் அதிக ரன்கள் எடுக்க வேண்டும். எனக்கு அது புரிகிறது. ரஹானாவுக்கும் அது புரிகிறது. அதை அவர் விரைவில் செய்வார். நான் அவரைப் பற்றி கவலைப்பட மாட்டேன். இந்திய அணிக்காக அவர் கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டங்களை விளையாடி உள்ளார். மீண்டும் அவர் அப்படிச் செய்வார்’ என நம்பிக்கைப்பட பேசியுள்ளார்.

CRICKET, AJINKYA RAHANE, ZAHEER KHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்