‘நாம பக்காவா ப்ளான் பண்ணுனோம்னா, அவங்களுக்கு அல்லு விட்ரும் பாஸூ’.. உலகக்கோப்பை குறித்து புதுமுக வீரர் அதிரடி கருத்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடரை பார்த்து எனக்கு பயமில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சாளர் சஹால் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடர் நடக்கவிருக்கும் மைதானங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகயிருக்கும் என பலரும் கூறிவருகின்றனர். இதையடுத்து, இந்திய அணியில் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் சுழற்பந்து வீச்சாளர் சஹால் மனம் திறந்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் குறித்து சஹால் கூறியதாவது, ‘இந்த மாதிரி ஃப்ளாட் ட்ராக்குகளை கண்டு கவலை கொள்ளபோவதில்லை. மேலும், இதுபோன்று தன்மையுடைய பெங்களூருவில் ஆடியுள்ளேன். இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடியது உலகக்கோப்பைக்கு அனுபவமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஃப்ளாட் ட்ராக்குகளால் நான் அடையும் பதட்டத்தை போன்றே எதிரணி வீரர்களும் பதட்டம் அடைவார்கள். மேலும், ரஸல், வார்னர் போன்ற வீரர்களின் பந்துவீச்சில் எந்த சிரமும் இருக்காது. இதையடுத்து,‘ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு உத்தியை கையாள வேண்டும். அதனால் ஒவ்வொரு பந்தையும் கவனமாக வீசினால் நாம சுலபமாக விக்கெட் எடுத்துவிடலாம்’ என்று சஹால் கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, YUZVENDRA CHAHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்