‘விடாமல் துரத்தும் கொரோனா’.. புதிதாக 2 இந்திய வீரர்களுக்கு தொற்று உறுதி.. நாடு திரும்புவதில் சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

க்ருணால் பாண்ட்யாவை தொடர்ந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதேபோல் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதற்கிடையில், இந்திய அணியில் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கடந்த 27-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அன்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி அடுத்த நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கௌதம், மனிஷ் பாண்டே, தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், க்ருணால் பாண்ட்யாவை தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மற்றும் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இந்திய வீரர்கள் இன்று (30.07.2021) மாலை நாடு திரும்ப உள்ளனர். ஆனால் க்ருணால் பாண்ட்யா உள்ளிட்ட 8 வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் இன்று நாடு திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களது தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னரே இந்தியா திரும்புவார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்