“என்ன 97-க்கே ஆல் அவுட் ஆகிட்டீங்க”.. ரெய்னாவை கலாய்த்த யுவராஜ்.. அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் ஆட்டம் குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் யுவராஜ் சிங் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய FB காதலன்.. திருமணம் ஆன பெண் போட்ட திடுக்கிடும் திட்டம்..!

ஐபிஎல் 15-வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதனால் 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 36 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 14.5 ஓவர்களில் 103 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 34 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே அணி தவறவிட்டது.

இந்த நிலையில் சென்னை-மும்பை போட்டியின் போது உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா (முன்னாள் சிஎஸ்கே வீரர்) ஆகியோர் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது சிஎஸ்கே அணி குறித்து கிண்டலாக சுரேஷ் ரெய்னாவிடம் யுவராஜ் பேசினார்.

அதில், ‘இன்றிரவு உங்கள் அணி 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டதே. இது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என யுவராஜ் சிங் கேட்டார். இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‘நான்தான் போட்டியிலேயே இல்லையே’ என பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

CRICKET, YUVRAJ SINGH, SURESH RAINA, CSK, MUMBAI INDIANS, IPL 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்