‘அடுத்து வரும் இந்தப் போட்டியில்’... ‘களமிறங்கும் சிக்சர் மன்னன்’... ரசிகர்கள் மகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங், அபுதாபியில் நடைப்பெறும் டி 10 கிரிக்கெட் லீக் போட்டியில் முதன் முதலாக பங்கேற்று விளையாட உள்ளார்.
இந்திய அணி வீரரான யுவராஜ் சிங், தனது ஓய்வுக்குப் பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில், இந்திய கிரிக்கெட் வாரிய அனுமதியுடன் பங்கேற்று விளையாடி வருகிறார். அண்மையில், கனடாவில் நடைப்பெற்ற குளோபல் டி20 லீக்கில் விளையாடினார்.
இந்நிலையில் வருகிற நவம்பர் மாதம் 14 முதல் 24-ம் தேதி வரை அபுதாபியில் டி 10 லீக் போட்டியின் 3-வது சீசன் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும், இந்தத் தொடரில், மராத்தா அராபியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல வீரரான பிராவோ (கேப்டன்), மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் உள்ளநிலையில், யுவராஜ் சிங் இந்த அணியில் பங்கேற்று விளையாட உள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள யுவராஜ் சிங், ‘எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். ஏனெனில் சர்வதேச அளவில் நான் பங்கேற்கும், டி10 இதுவாக இருக்கும். மேலும் அங்குள்ள ரசிகர்களின் ஆதரவு மற்றும் உற்சாகம், எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்னோட சூப்பர்ஸ்டார்’ ‘உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தீங்க’.. கங்குலியின் வைரல் ட்வீட்..!
- ‘டி20 போட்டிக்கு இவர கேப்டனா ஆக்கலாம்’.. யுவராஜ் சிங் சொன்ன புது யோசனை..!
- ‘யோ-யோவில் தேர்வாகியும் எனக்கு நடந்தது அநியாயம்’.. ‘உலகக்கோப்பை கனவு குறித்து யுவராஜ் சிங் வேதனை’..
- ‘தோனி ஒருநாள்ல உருவான வீரர் இல்ல’.. தோனியின் ஓய்வு குறித்து யுவராஜ் சிங் பதில்..!
- ‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..!
- 'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
- 'ஆமா... அப்படியே விசாரிப்பீங்க.. இன்னும் நிறைய ப்ளான் வெச்சிருப்பீங்க.. தெரியாதா?’.. வைரல் ட்வீட்!
- 'களமிறங்க மறுத்து போராட்டம் நடத்திய’... ‘யுவராஜ் தலைமையிலான அணி’... 'குளோபல் டி20-யில் நிலவிய குழப்பம்'???
- 'பேட்டிங், பீல்டிங்கில் மரண மாஸ் காட்டிய யுவராஜ் சிங்'... வைரலான வீடியோ!
- 'வா தல.. வா தல'.. கெயிலின் சாதனையை முறியடித்து 'புதிய சாதனை'.. 'அட்சு தூக்கிய இந்திய வீரர்'!