‘முதலில் தகுதி பெறுங்க அப்பறம் பேசுங்க..’ முன்னாள் வீரரைக் கலாய்த்த யுவராஜ் சிங்.. வைரலாகும் ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் முதல் தோல்விக்குப் பிறகு வங்க தேசத்துக்கு எதிராக விளையாடி வருகிறது இந்திய அணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரோஹித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை இந்தத் தொடரில் 4 சதங்கள் அடித்துள்ள இவர் உலகக் கோப்பையில் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் (544) அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதைப் பாராட்டி யுவராஜ் சிங் ட்விட்டரில், “ரோஹித் ஷர்மா தொடர் நாயகன் விருதுக்கு அருகில் செல்கிறார். ஹிட்மேன் யூ பியூட்டி 100 நம்பர் 4. மிகச் சிறப்பான ஆட்டம் சாம்பியன்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றால் அது நடக்காது” எனக் கூறியுள்ளார். அவருடைய ட்வீட்டிற்குப் பதிலளித்துள்ள யுவராஜ் சிங், “முதலில் தகுதி பெறுங்கள். பிறகு ஜெயிப்பது பற்றிப் பேசுங்கள். நான் தொடர் நாயகன் விருது பற்றிப் பேசுகிறேன். வெற்றி பெறுவதைப் பற்றி அல்ல” என பீட்டர்சனைக் கலாய்த்துள்ளார். ட்விட்டரில் யுவராஜ் சிங்கின் இந்த உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

ICCWORLDCUP2019, INDVSENG, ROHITSHARMA, HITMAN, YUVRAJSINGH, INDVSBANG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்