"ஊரே 'இந்தியா'வ பாராட்டிட்டு இருக்கு... இவரு என்ன இப்டி குதர்க்கமா பேசுறாரு??..." 'யுவராஜ் சிங்' போட்ட 'ட்வீட்'... கடுப்பான 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி, 2 - 1 என்ற முன்னிலையில் உள்ளது.

இதில், மூன்றாவது போட்டி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களும், இந்திய அணி 145 ரன்களும் எடுத்திருந்தது. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆல் அவுட்டாக, இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் அதே வேளையில், பிட்ச்சின் காரணமாக தான் இந்திய அணி வெற்றி பெற்றது என மீண்டும் பலர் கூறி வருகின்றனர். இரண்டு நாட்கள் கூட தாங்காத இந்த டெஸ்ட் போட்டியில், சென்னை சேப்பாக்கம் பிட்ச்சை போன்றே அகமதாபாத் பிட்ச்சும் சுழலுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், இந்தியாவின் வெற்றியை பெரிய அளவில் கொண்டாட மனமில்லாமல், பாராட்ட வேண்டுமே என்பது போன்ற ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அவர் தனது டீவீட்டில், 'இரண்டு நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமான விஷயமா என்று தெரியவில்லை. அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த மாதிரியான மைதானங்களில் பந்து வீசியிருந்தால் 1000 அல்லது 800 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்திருப்பார்கள்.

 

எனினும், நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்' என சற்று குதர்க்கமாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். நெட்டிசன்களிடையே இந்த ட்வீட், பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு இந்திய ரசிகர்கள் பலர் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணி வெளிநாட்டு மைதானங்கள் வரை சிறப்பாக சென்று விளையாடி வரும் சூழ்நிலையில், தற்போது அவர்கள் பெறும் வெற்றிக்கு மைதானத்தை மட்டுமே காரணம் கூற முடியாது என்பது போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். யுவராஜ் சிங்கின் டிவீட்டை பகிர்ந்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகனும், 'நீங்கள் சரியாக சொன்னீர்கள் யுவி' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்