‘2011 உலகக்கோப்பையில மேட்ச் வின்னர்’.. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஓய்வு? திடீர் முடிவா? .. சோகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த யுவராஜ் சிங் பல்வேறு போட்டிகளில் மேட்ச் வின்னராக இருந்துள்ளார். சில வருடங்கள் முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் அதில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பினார். ஆனால் முன்பை போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாம தவித்த யுவராஜ் சிங் அணியில் இருந்து மெதுவாக ஓரம் கட்டப்பட்டார்.

இதனை அடுத்து ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் யுவராஜ் எடுக்கப்படவில்லை. கடைசியாக மும்பை அணி யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்தது. ஆனாலும் சில போட்டிகளில் மட்டுமே யுவராஜ் சிங் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களில் வரைவுபட்டியலில் இடம்பெற்றுள்ளார். இப்போட்டியில் விளையாட இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ICCWORLDCUP2019, BCCI, TEAMINDIA, YUVRAJSINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்