என்ன மாதிரி 6 பந்துல '6 சிக்ஸ்' அடிக்கனும்னா... அது கண்டிப்பா 'அவரால' தான் சாத்தியம்...! - நானே 'அவரோட' சில 'ஷாட்' பார்த்து மிரண்டு போய்ட்டேன்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 2007-ம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராடு வீசிய 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து  பந்தை துவம்சம் செய்தார் யுவராஜ் சிங்.

இந்த சாதனையை உள்ளூர் கிரிக்கெட்டில் ரவிசாஸ்திரி ஏற்கனவே செய்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவொரு இந்திய வீரரும் பதிவு செய்யவும் இல்லை, தற்போது வரைக்கும் இந்த சாதனையை முறியடிக்கவும் இல்லை. இதன் மூலம் யுவராஜ் சிங்கிற்கு மேலும் ரசிகர்கள் உலக அளவில் உருவானார்கள். அது இன்று வரை தொடரவும் செய்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்கள் இந்த சாதனையை முறியடிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், இது குறித்து சமூக வலைதளங்களில், 'இந்திய அணி சார்பாக யுவராஜ் சிங் மட்டுமே செய்துள்ள இந்த சாதனையை இப்போது உள்ள எந்த வீரர் முறியடிப்பார்' என்பது போன்ற கேள்விகளையும் நெட்டிசங்கள் எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், தன்னை போல் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடிக்க இப்போதைக்கு அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 'சிக்சர்களை அடிக்கும் பலமும், பேட்டிங்கில் நுணுக்கமும் ஹர்டிக் பாண்டியாவிடம் நன்றாகவே இருக்கிறது. நிச்சயம் அவர் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க நிறைய வாய்ப்புள்ளது' என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

சமீபகாலமாக தனது பேட்டிங்கில் மெருகேறி வரும் ஹார்டிக் பாண்டியா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்துகளை கிரவுண்டிற்கு வெளியே பறக்க விட்டு அதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

மேலும், அதிரடியாக ஆடி சில சிக்ஸர்களை பறக்க விட்டு மூக்கு மேல் விரல் வைக்க செய்திருக்கிறார்.

அவருடைய சில ஷாட்களை பார்த்து நானே மிரண்டு போய்விட்டேன். எனவே அவரால் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்