'தோனியும், கோலியும் "அவர்" அளவுக்கு என்னை 'சப்போர்ட்' பண்ணல!'... பகிரங்கமாக போட்டு உடைத்த யுவராஜ் சிங்!... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகங்குலி போல எனக்கு தோனியும், கோலியும் உறுதுணையாக இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை ஹீரோவாக கருதப்படுபவர் யுவராஜ் சிங். உலகக் கோப்பை தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு யுவராஜ் சிங் கவுரவப்படுத்தப்பட்டார். இதனிடையே, 2011 உலகக் கோப்பைக்கு பின்னர் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அதன் காரணமாக, தீவிர சிகிச்சை மேற்கொண்டு குணமாகி, கடுமையான பயிற்சிகு பின் மீண்டும் அணிக்கு திரும்பினார். ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், யுவராஜ் சிங்கிற்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் ஓய்வு பெற்றார். இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'சவுரவ் கங்குலி தலைமையில் விளையாடியது என்னால் மறக்கவே முடியாது. அப்போது அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். கங்குலியிடம் இருந்து அணியின் தலைமை தோனியிடம் சென்றது. யாருடைய தலைமை சிறந்தது கங்குலியா? தோனியா? என கேட்டால் அது சொல்வது மிகவும் சிரமம். ஆனால், சவுரவ் கங்குலி தலைமையில் நிறையப் போட்டிகள் விளையாடியதால், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. ஏனென்றால், அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய யுவராஜ், "கங்குலி எனக்கு உறுதுணையாக இருந்ததுபோல தோனியும், கோலியும் இல்லை. இருவரிடமும் சாதகமும் பாதகமும் நிறைய இருக்கிறது" என்றார். கொரோனா வைரஸ் குறித்து பேசிய அவர், "உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் உயிரிழப்பதை காணும்போது இதயம் உடைகிறது. கொரோனா வைரஸ் மிக மிக வேகமாக பரவுகிறது."
மேலும், "கொரோனா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையத்தை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும், தேவையற்ற வதந்திகளையும் அச்சத்தையும் கைவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐபிஎல்' நடக்கலேன்னா... கண்டிப்பா 'குடுக்க' மாட்டோம்... கிரிக்கெட் சங்கத்தின் 'அறிவிப்பால்' வீரர்கள் கலக்கம்!
- '2007இல் உலகக் கோப்பை ஹீரோ!'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி!
- முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!
- இவ்ளோ 'பணம்' இருந்தா போதும்... லைஃப்ல 'செட்டில்' ஆயிடுவேன்... உடைந்த 'ரகசியம்' தோனி சொன்ன அமவுண்ட் எவ்ளோன்னு பாருங்க?
- 'ஊரடங்கிலும் உயர்ந்து நின்ற மனிதநேயம்' ... உயிரிழந்த ஹிந்து மத நபருக்கு ... இறுதி சடங்கு செய்த முஸ்லீம் நண்பர்கள்!
- 'அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல' ... ஊரடங்கு இந்த 'நாள்' வர தான் .. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு
- 'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...
- “இவ்ளோ சென்சிடிவான நேரத்துல இப்படியா பண்ணுவீங்க.? உங்கள நெனைச்சு வெக்கப்படுறேன்!”.. கொதித்தெழுந்த சாக்ஷி தோனி!
- ‘லாக் டவுனில் மட்டுமே நேரத்தை செலவு பண்ணாதீங்க’... ‘உலக நாடுகள் இந்த 6 விஷயங்களையும் சேர்த்து செய்யுங்க’... எச்சரிக்கும் WHO இயக்குநர்-ஜெனரல்!
- 'இங்க இனிமே இருந்தா செத்து தான் போவோம்' ... 'கல்லு தான் சாப்பிடணும் இங்க' ... டெல்லியை விட்டு வெளியேறும் கூலி தொழிலாளர்கள்