என்னது, மறுபடியும் வர்றாரா...? உண்மையா இது...? 'போட்றா வெடிய...' 'இன்ஸ்டாகிராமில் போட்ட வைரல் போஸ்ட்...' - தெறிக்க விடும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக பட்டைய கிளப்பியவர் யுவராஜ் சிங். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Yuvraj Singh announced come back to cricket on february

என்னது, மறுபடியும் வர்றாரா...? உண்மையா இது...? 'போட்றா வெடிய...' 'இன்ஸ்டாகிராமில் போட்ட வைரல் போஸ்ட்...' - தெறிக்க விடும் ரசிகர்கள்...!
Advertising
>
Advertising

அதற்கு பிறகு வெளிநாட்டு லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் யுவராஜ் சிங், தான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்புவதாக கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Yuvraj Singh announced come back to cricket on february

யுவராஜ் சிங் பகிர்ந்துள்ள அந்த இன்ஸ்டாகிராம் போஸ்டில், கடைசியாக அவர் இந்திய அணியின் ஜெர்சியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் அடித்து துவம்சம் செய்து சதமடித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், "அனைவரின் தலைவிதியை கடவுள்தான் தீர்மானிப்பார். ரசிகர்களின் தொடர்ச்சியாக விடும் கோரிக்கைகளுக்கு ஏற்ப, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நான் மீண்டும் களத்திற்குள் இறங்குவேன் என நம்புகிறேன்.

மேலும், இந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் கிடையாது. உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. இந்தியா நம்முடைய அணி. கடினமான நேரங்களில் அணியைக் கைவிடாமல் ரசிகர்களாக தொடர்ந்து ஆதரவு தாருங்கள்" என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். 39 வயதான யுவராஜ் சிங் எவ்வாறு களத்திற்கு திரும்புகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

YUVRAJ SINGH, FEBRUARY, COME BACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்