இந்தியாவுக்கு ஆடாமலே 10 கோடி சம்பளம் கொடுத்தா.. எப்படி 'அதுல' விளையாடுவாங்க? இளம் வீரர்கள் மீது கொந்தளித்த யுவராஜ் சிங்! பின்னணி தகவல்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகிறதா? என்ற விவாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | தோல்வி அடைந்த லக்னோ.. அணி வீரர்கள் மீது கௌதம் கம்பீர் காட்டம்! பரபரப்பு வீடியோ

T20 கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உலகம் முழுவதும் உருவாகி வரும்  T20 லீக்குகள் முக்கிய காரணங்களாகும். பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்தக்கட்டம் வளர்ச்சி குறித்து அவ்வப்போது பேசி வருகின்றனர், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தற்போது டெஸ்ட் போட்டிகள் குறித்து பேசியுள்ளார்.

“டெஸ்ட் கிரிக்கெட் இறந்து கொண்டிருக்கிறது. மக்கள் டி20 கிரிக்கெட் பார்க்க விரும்புகிறார்கள்; மக்கள் டி20 கிரிக்கெட் விளையாட விரும்புகிறார்கள்.  ஒருவர் ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஐந்து லட்சம் ரூபாய் வாங்குகிறார், இன்னொருவர் டி20 கிரிக்கெட் விளையாடி 50 லட்சம் வாங்குகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தேசத்து அணியில் இடம் பெறாத வீரர்கள் 7-10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.”

“நீங்கள் டி20 ஆட்டத்தைப் பார்த்துவிட்டு 50 ஓவர் ஆட்டத்தைப் பாருங்கள் - அது இப்போது டெஸ்ட் போட்டியாகத் தெரிகிறது. 20 ஓவர்களுக்குப் பிறகு, ‘பேட் செய்ய 30 ஓவர்கள் இருக்கிறது! எனவே, நிச்சயமாக டி20 எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறது." என்று யுவராஜ் கூறியுள்ளார்.

இளம் வீரர்கள் தங்களை உயர்ந்த மட்டத்தில் நிரூபிக்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் யுவராஜ் சிங் கூறினார். அபிஷேக் சர்மா, சிவம்  தூபே ஆகியோர் தன்னைப்போல ஆடுவதாகவும் யுவராஜ் குறிப்பிட்டார். துபே இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 160.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 279 ரன்கள் எடுத்துள்ளார். SRH வீரர் அபிஷேக் 132.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 331 ரன்கள் எடுத்துள்ளார்.

யுவராஜ் ஜூன் 2019 இல் தனது ஓய்வை அறிவித்தார். இந்தியாவுக்காக 40 டெஸ்ட், 308 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி முறையே 1900, 8701 மற்றும் 1177 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் 148 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஒரே இந்தியர் யுவராஜ் சிங் தான். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆண்டில் அவர் இந்த அரிய சாதனையைப் படைத்தார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, YUVRAJ SINGH, TEST CRICKET, T20, டெஸ்ட் கிரிக்கெட், யுவராஜ் சிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்