‘ஓய்வுக்குப் பின்’... ‘மீண்டும் பேட்டிங்கை கையிலெடுத்த சிக்ஸர் மன்னன்’... ‘அனுமதிக்கு வெயிட்டிங்’... ‘வெளியான ஆச்சரிய தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தற்போது சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

அடுத்த வருட தொடக்கத்தில் முதல தர டி 20 தொடரான சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு மாநில அணிகளும் தங்கள் மாநில வீரர்களை தேர்வு செய்து உள்ளது. பல்வேறு மாநில அணிகள் இன்னும் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் 2021 தொடருக்கு முன் இந்த சையது முஸ்டாக் கோப்பை போட்டி நடக்க உள்ளதால், இதில் இருக்கும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி சிக்ஸர் மன்னனான யுவராஜ் சிங், தற்போது சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் அணியின் 30 பேர் கொண்ட முதல் கட்ட வீரர்கள் குழுவில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் பெயர் பஞ்சாப் அணியில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அத்துடன் பஞ்சாப் அணி வீரர்களுடன் தங்கி, யுவராஜ் சிங் இப்போதே வலைப் பயிற்சியை தொடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் ஏற்கனவே ஓய்வு பெற்று அதன்பின் கனடாவில் நடந்த குளோபல் டி 20 லீக் போட்டிகளிலும் ஆடி உள்ளார். பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர் வெளிநாட்டு தொடரில் ஆடிவிட்டால் மீண்டும் பிசிசிஐ நடத்தும் போட்டி எதிலும் ஆட முடியாது. இதனால் யுவராஜ் சிங், சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆடுவாரா மாட்டரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

பஞ்சாப் அணியின் ஆலோசகராக மாற முயன்று கொண்டு இருப்பதால், பயிற்சி குழுவில் இணைவதற்கான திட்டங்களுக்காக அவர்  மீண்டும் பயிற்சி மேற்கொண்டுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வேண்டும் என்று யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதான் இவர் மீண்டும் ஆக்டிவாக காரணம் என்றும் தெரிகிறது. மீண்டும் விளையாடுவதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜே ஷாவிடம் தனது ஓய்வை திரும்பப் பெற யுவராஜ் சிங் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை பிசிசிஐ அனுமதித்தால் இவர் முதல் தர போட்டிகளில் தொடர்ந்து ஆடும் திட்டத்தில் இருக்கிறார். 2021-ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில்,  பஞ்சாப் அணி அல்லது வேறு ஏதாவது ஒரு அணிக்கு ஆலோசகராக செல்ல வேண்டும் என்று யுவராஜ் சிங் நினைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக யுவராஜ் சிங் இப்போது களத்திற்கு திரும்பி கம்பேக் கொடுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்